காற்று மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்கான புதிய வகை முகக்கவசம் – விரைவில் அறிமுகம்!

0
காற்று மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்கான புதிய வகை முகக்கவசம் - விரைவில் அறிமுகம்!
காற்று மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்கான புதிய வகை முகக்கவசம் - விரைவில் அறிமுகம்!
காற்று மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்கான புதிய வகை முகக்கவசம் – விரைவில் அறிமுகம்!

இந்தியாவில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த காற்று மாசுபாட்டால் நோய்கள் பரவும் அபாயம் அதிகம் காணப்படுகிறது. இந்த நிலையில் இதிலிருந்து காத்து கொள்ள இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புது வகையான தலைக்கவசம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசுபாடு:

இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகளில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது காற்று மாசுபாட்டால் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் மக்கள் தொகை அதிகரிப்பால் நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் போக்குவரத்து வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகள், நச்சு வாயுக்கள் காற்றில் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.

நாட்டில் இயங்கி வரும் மின்சார நிலையங்கள், அணு உலைகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனை தவிர மக்கள் அதிகளவில் குளிர்சாதன பெட்டிகளை வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதிலிருந்து வெளியாகும் குளோரோ புளோரோ கார்பன் வாயு காற்றில் கலப்பதால் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலம் பாதித்து வருகிறது. இதனால் மக்களுக்கு பல நோய்கள் வரும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து வருகிறது.

சிறப்பு கட்டண ரயில்களுக்கான சேவை நீட்டிப்பு – முன்பதிவு தொடக்கம்!

இந்த நிலையில் இந்தியாவில் டெல்லி, மும்பை உள்ளிட்ட மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் காற்று மாசுபாடு அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதிலிருந்து மக்களை பாதுகாக்க ஷெல்லியோஸ் டெக்னோ லேப்ஸ் நிறுவனம் காற்று மாசு எதிர்ப்பு தலைக் கவசத்தை தயாரித்துள்ளது. மேலும் இந்த தலைக்கவசத்தில் புளூ டூத்துடன் இணைக்கப்பட்ட செயலி உள்ளது. இந்த செயலி மூலம் எப்போது தலை கவசத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தூய்மையான காற்றினை சுவாசிக்க முடியும். இந்த நிலையில் நொய்டாவில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்முனைவோர் தொழில்நுட்பப் பூங்காவில் இந்த தலைக்கவசம் தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!