கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் புது திருப்பம் – முக்கிய தகவல் வெளியீடு!

0
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் புது திருப்பம் - முக்கிய தகவல் வெளியீடு!
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் புது திருப்பம் - முக்கிய தகவல் வெளியீடு!
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் புது திருப்பம் – முக்கிய தகவல் வெளியீடு!

கடந்த 13 ஆம் தேதி , கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது

புது திருப்பம்:

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள சின்னசேலம் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மாணவியின் மர்ம மரணத்தை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது

Exams Daily Mobile App Download

இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று மதியம் 2:15 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்ததுடன், அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

CAG இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலை 2022 – கட்டணம் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்!

இதனையடுத்து சின்ன சேலம் பள்ளி மாணவி உடலை வாங்க பெற்றோருக்கு உத்தரவிடக்கோரிய அரசின் முறையீட்டை இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்பொழுது நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் உடலை பெற்றோர் பெற்று கொள்ளவில்லை என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராமலிங்கம் தரப்பு, நீதிமன்ற உத்தரவை மீறி மறு பிரேத பரிசோதனையின் போது பெற்றோர் மற்றும் எங்கள் தரப்பு வழக்கறிஞர் இல்லாமலேயே நடத்தி விட்டனர் என்றார்.

அனைத்து நடைமுறைகளும் நீதிமன்ற உத்தரவுப்படி தான் நடைபெற்றது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்று விட்டனர் என அரசு தரப்பு கூறியது. அதற்கு பதில் அளித்த ராமலிங்கம் தரப்பு, நாங்கள் கூறும் மருத்துவர்களை கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தோம். தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தை அனுகலாம் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. எனவே இந்த வழக்கை முடிக்க கூடாது எனக் கூறினார். எனவே நாளை நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்யுங்கள். நாளை காலை 10:30 மணிக்கு விசாரிக்கிறேன் என நீதிபதி தெரிவித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here