தமிழக பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – விடுப்பு கோர கல்வித்துறையின் புதிய அம்சம்!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு - விடுப்பு கோர கல்வித்துறையின் புதிய அம்சம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு - விடுப்பு கோர கல்வித்துறையின் புதிய அம்சம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு – விடுப்பு கோர கல்வித்துறையின் புதிய அம்சம்!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இனி வரும் நாட்களில் விடுப்பு குறித்த சிரமங்களை போக்க அரசு உருவாகியுள்ள புதிய அம்சங்கள் குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் தகவல் வெளியிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வி ஆணையர் :

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் படி ஏற்கனவே எமிஸ் இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு அதன் மூலம் ஆசிரியர், மாணவர் தொடர்புடைய விவரங்களை எளிதாக பெற்று வருகிற விதமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அது போலவே தற்போது பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஒரு புது அம்சத்தை அரசு உருவாக்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது, ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் விடுப்பு அனுமதிக்காக ஒவ்வொரு முறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட மற்றும் பள்ளிகளின் உயர் அலுவலர்களிடம் சென்று நேரடியாக விண்ணப்பிக்க வேண்டி இருந்தது. இதனால் வீண் கால விரயம் ஏற்படுவதுடன் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன. இதையடுத்து இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்த மயமாக இருந்த நிலையில் அதனை எளிமைப்படுத்தும் விதமாக தற்போது செல்போன் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட நன்மைகள் – மீண்டும் அமலாகுமா?

இதனை கடந்த மாதம் 25ம் தேதியன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மேற்குறிப்பிட்ட சிரமங்கள் மற்றும் கால விரயத்தை தவிர்க்கும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் செல்போன் வாயிலாக TNSED-Schools என்ற இணைய வழியில் பயன் பெறுமாறு ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் தங்களுக்கு தேவைப்படும் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு கோருதல், அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த பலன்களை நடப்பு 2022-2023 ம் கல்வியாண்டில் இருந்து அந்த ஆப் மூலம் விண்ணப்பித்து பயனடைந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!