தனிமையில் வாடும் சிறை கைதிகளுக்கு நல்ல வாய்ப்பு – அரசின் புதிய திட்டம்!

0
தனிமையில் வாடும் சிறை கைதிகளுக்கு நல்ல வாய்ப்பு - அரசின் புதிய திட்டம்!
தனிமையில் வாடும் சிறை கைதிகளுக்கு நல்ல வாய்ப்பு - அரசின் புதிய திட்டம்!
தனிமையில் வாடும் சிறை கைதிகளுக்கு நல்ல வாய்ப்பு – அரசின் புதிய திட்டம்!

பல வருடங்களாக சிறையில் வாடும் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட ஆசைப்பட்டாலும், அதற்கான வாய்ப்புகள் இதுவரையிலும் கிடைக்காமல் இருந்தது. ஆனால், தற்போது ஒரு புதிய அறிவிப்பை மாநில அரசு அறிவித்துள்ளது.

அரசின் புதிய திட்டம்:

நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் சிறைகள் உள்ளது. இது தவிர மத்திய அரசின் கீழ் முக்கிய மாநிலங்களில் சிறை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளின் தவறுகளை பொறுத்து நீதிமன்றம் தண்டனை காலத்தை நிர்ணயிக்கிறது. குற்றவாளிகளில் ஒரு சிலர் மட்டுமே திட்டமிட்டு தவறுகளை செய்பவர்களாக உள்ளனர். அதிகமானோர் தங்களின் உணர்ச்சி பெருக்கில் ஒரு நொடி யோசிக்காமல் தவறுகளை செய்பவர்கள் தான்.

இவ்வாறு செய்த தவறுக்கு தண்டனையாக பல ஆண்டுகள் சிறையில் காலத்தை கழிக்க வேண்டி உள்ளது. இதனால் இவர்கள் தங்கள் குடும்பத்தினரை நினைத்து மிகவும் வாடும் நிலையும் உள்ளது. இவ்வாறு தனிமையில் தங்கள் குடும்பத்தை நினைத்து வாடும் சிறை கைதிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டிலேயே முதன்முறையாக பஞ்சாப் மாநிலத்தில் சிறைக்கைதிகள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் நேரம் செலவிடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வரும் 27ம் தேதி அன்று ‘முழு அடைப்பு’ – காரணம் இது தான்! அவதியில் பொதுமக்கள்!

Exams Daily Mobile App Download

அதன்படி, கைதிகளின் நன்னடத்தை அடிப்படையில் சிறை வளாகத்துக்குள்ளேயே அவர்கள் தமது மனைவி அல்லது கணவருடன் தனிமையில் இரண்டு மணி நேரம் கழிவறையுடன் கூடிய தனி அறையில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் வரும் செப்டம்பர் 27ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. கொலை, பாலியல் குற்றவாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியாது என்றும், நன்னடத்தை கைதிகளுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை வழங்கப்படும் என்றும், சிறை கைதிகளின் திருமண வாழ்க்கைக்கு மதி்ப்பளிக்கும் விதத்திலும், அவர்களின் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தையை அதிகரிக்கும் விதமாக இந்த திட்டம் தொடங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!