புத்தக பையை சுமக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மாநில அரசு அதிரடி முடிவு!

0
புத்தக பையை சுமக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - மாநில அரசு அதிரடி முடிவு!
புத்தக பையை சுமக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் - மாநில அரசு அதிரடி முடிவு!
புத்தக பையை சுமக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ் – மாநில அரசு அதிரடி முடிவு!

பள்ளி குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் எழுதுவதை என்னைக்கு கண்டு பிடிச்சாங்களோ அன்றில் இருந்து துவங்கினதுதான் இந்த அதிக எடை புத்தகப் பை பயணம். எர்கோனோமிக் லெவல் மாறிக்கொண்டே இருக்கும் இந்த காலகட்டத்தில் ஸ்டைல் மாறினாலும் வெயிட் மாறவில்லை என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் அரசு அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

புத்தக பையின் எடை :

பெரும்பாலானோர் வீட்டில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போது டாடா சொல்லி வழி அனுப்பி வைப்பது வழக்கம். அப்படி சொல்லும் போது குழந்தைகள் அவர்களது முதுகில் சுமந்து செல்லும் புத்தகப் பையை மீறி கழுத்தைத் திருப்பி புன்னகை சிரிப்பால் விடை பெறும் போது அதை பார்த்து மனசு வலிக்காத பெற்றோரே இல்லை. ஏனெனில் சாப்பிட்ட தட்டை கூட எடுத்து வைக்க பழக்கம் கொடுக்காமல் செல்லமாய் வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொதி மூட்டை எடைக்கு சமமாக இருக்கும் புத்தக பையை சுமப்பது என்றால் அவ்ளோ சுலபமா? என்ன?

Exams Daily Mobile App Download

அதெற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணமாக மத்தியப் பிரதேச குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை (ஜூலை 28) அன்று ஆணையத்தின் குழு ஒன்று போபால் நகரத்தின் ஒரு சில பள்ளிகளில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அப்போது மாணவர்கள் சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக எடையுள்ள பைகளை எடுத்துச் செல்வதை கண்டறிந்தனர். அதாவது சில மாணவர்களின் பள்ளி பைகளை தூக்கி பார்த்த போது கனமாக இருந்தன. அதனால் எடையைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டதாக MPCRPC உறுப்பினர் பிரிஜேஷ் சவுகான் கூறினார்.

மேலும், பாலிசியின் படி, பள்ளி பையின் எடை :
  • 1 மற்றும் 2 வகுப்பு மாணவர்களுக்கு 1.6 முதல் 2.2 கிலோ.
  • 3,4 மற்றும் 5 வகுப்புகளுக்கு 1.7 முதல் 2.5 கிலோ.
  • 6 மற்றும் 7வகுப்புகளுக்கு 2 முதல் 3 கிலோவும், 2.5 முதல் 3 கிலோவும் இருக்க வேண்டும்.

Common Wealth போட்டிகள் 2022: வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் – வாழ்த்தி வரும் ரசிகர்கள்

  • 8 வகுப்புக்கு 4 கிலோ.
  • 9 மற்றும் 10வகுப்புகளுக்கு 2.5 முதல் 4.5 கிலோ..
  • 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு 3.5 முதல் 5 கிலோ.

இதை தொடர்ந்து குழந்தைகள் அன்றாடம் எடுத்துச் செல்லும் தேவையற்ற பொருட்களை குறைக்க ஒவ்வொரு வகுப்பிலும் அலமாரிகள் அல்லது ரேக்குகள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் பள்ளிகளின் நிர்வாகத்துடன் சவுகான் உரையாடியபோது கூறினார். மேலும், மாணவர்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டதுடன், ஏதேனும் சிரமங்களை எதிர்கொண்டாலோ அல்லது பள்ளியில் மற்றும் பள்ளிக்கு செல்லும் வழிகளில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098ஐ அழைக்கலாம். இந்த புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சவுகான் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!