தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – கோட்டாட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் - கோட்டாட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் - கோட்டாட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – கோட்டாட்சியர் உத்தரவு!

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவா்த்தியில், கலவரத்தை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக இன்று (ஏப்ரல்.13) முதல் அடுத்த 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா பேரலை தொற்று ஓய்ந்திருக்க கூடிய இந்த சூழலில் தமிழகம் முழுவதும் கொரோனா தொடர்புடைய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு மக்கள் இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையில் தமிழகத்தில், மயிலாடுதுறை மாவட்டம் பட்டவா்த்தியில் கலவரத்தை தவிர்க்கும் விதமாகவும், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் நடவடிக்கையாகவும் இன்று (ஏப்ரல்.13) முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதாவது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டவர்த்தி கிராமத்தில், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பா் 6ம் தேதியன்று அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில் வைத்து இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்து பின்னர் தீர்வு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதியன்று அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கோரி இருந்தனர்.

அதே நேரத்தில் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள காத்தாயி அம்மன் கோயிலின் சித்ரா பௌா்ணமி உத்ஸவத்திற்காக மற்றொரு சமூகத்தினரும் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போது இந்த நிகழ்வுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட கோட்டாட்சியருக்கு மயிலாடுதுறை காவல் ஆணையர் கடிதம் அனுப்பி இருந்தார்.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்த கோரிக்கையை நேற்று (ஏப்ரல்.12) விசாரித்த மயிலாடுதுறை கோட்டாட்சியர், பட்டவர்த்தி கிராமத்தில் அமைதியை நிலைநாட்டும் விதமாக குற்ற விசாரணை முறைச்சட்டம் 144(3)ன் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி பிறப்பித்த உத்தரவில், பட்டவர்த்தி கிராமத்தில் இன்று (ஏப்ரல்.13) காலை 6 மணி முதல் ஏப்ரல் 17ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும் தலைஞாயிறு மதகடி பகுதியில் இருந்து சுமார் 1 கிமீ சுற்றளவுக்கு 2 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!