முழு அடைப்பு போரட்டம் (பந்த்) – தனியார் பேருந்துகள் ரத்து! வெறிசோடிய சாலைகள்!

0
முழு அடைப்பு போரட்டம் (பந்த்) - தனியார் பேருந்துகள் ரத்து! வெறிசோடிய சாலைகள்!
முழு அடைப்பு போரட்டம் (பந்த்) - தனியார் பேருந்துகள் ரத்து! வெறிசோடிய சாலைகள்!
முழு அடைப்பு போரட்டம் (பந்த்) – தனியார் பேருந்துகள் ரத்து! வெறிசோடிய சாலைகள்!

இந்து மதத்தையும், பெண்களையும் இழிவாக பேசியயதை கண்டித்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரியில் இந்து அமைப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று புதுவையில் பந்த் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஏராளமான காவலர்கள் சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்:

தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஜக அலுவலகங்களை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடந்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல்வேறு இடங்களில் போராடங்கள் நடந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிகைகளை மேற்கொண்டு வருகிறது.நடந்து வரும் கலவரங்களை தடுக்க ‛ரேப்பிட் ஆக்சன் போர்ஸ்’ என்ற பாதுகாப்பு படையினர் களத்தில் இறக்கி பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் புதுவையிலும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்து மதத்தையும், பெண்களையும் தி.மு.க. எம்.பி. ராசா இழிவாக பேசியதை பல கட்சிகளும் இந்து அமைப்புகளும் வன்மையாக கண்டித்துள்ளனர். இதனை எதிர்த்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும் தி.மு.க. எம்.பியை கண்டித்து 27ம் தேதி புதுச்சேரியில் முழு அடைப்பு போரட்டம் (பந்த்) நடைபெறும் என்று இந்து முன்னணி அறிவித்தது. அதன் படி 27ம் தேதியான இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தின் காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

GATE 2023 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வாய்ப்பை தவற விடாமல் முந்துங்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் முக்கிய வீதிகளில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சிறிய கடைகள் கூட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தால் தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. குறிப்பிட்ட பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. அதனால் சாலைகள் மக்கள் நடமாற்றமின்றி வெறிசோடி காணப்பட்டது. மேலும் புதுவையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அரசு மற்றும் பிற பள்ளி மாணவர்கள் பள்ளி செல்வதில் சிரமத்தை சந்தித்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!