நிஜத்திலும், சீரியலிலும் அப்பாவான பிரபல சீரியல் நடிகர் – ரசிகர்கள் வாழ்த்து!

0
நிஜத்திலும், சீரியலிலும் அப்பாவான பிரபல சீரியல் நடிகர் - ரசிகர்கள் வாழ்த்து!
நிஜத்திலும், சீரியலிலும் அப்பாவான பிரபல சீரியல் நடிகர் - ரசிகர்கள் வாழ்த்து!
நிஜத்திலும், சீரியலிலும் அப்பாவான பிரபல சீரியல் நடிகர் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாவம் கணேசன்” சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் நவீன், தற்போது சீரியலிலும், நிஜ வாழ்க்கையிலும் அப்பாவாகி இருக்கிறார். அவர் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகர் நவீன்:

தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சிறந்த மிமிக்கிரி கலைஞராக கலந்து கொண்டு, வெற்றி வாய்ப்பை தட்டி சென்றவர் நவீன். அவர் அப்துல் கலாம் அவர்கள் போல மிமிக்ரி செய்து பேசுவதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். சின்னத்திரை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்கள் மனதை கவர்ந்த அவர், அதன் பின் பல மாதங்கள் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இந்நிலையில் அவர் விஜய் டிவியில் பாவம் கணேசன் சீரியல் மூலமாக மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அந்த சீரியலில் அவருடைய நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அவர் சில ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணகுமாரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், தனது மனைவிக்கு பிரமாண்டமாக வளைகாப்பு விழா நடத்தியுள்ளார். அதில் பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

விஜய் டிவி சீரியலை விட்டு விலக நான் காரணம் இல்லை – மனம் திறந்த நடிகர்! ரசிகர்கள் ஷாக்!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் நடிகர் நவீன் தற்போது நடித்து வரும் பாவம் கணேசன் சீரியலிலும் அவருடைய மனைவி கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் குழந்தை பிறந்தது போல காட்சிகள் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிஜத்திலும் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அவருக்கு பல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!