அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பிரபல நிறுவனம் – ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

0
அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பிரபல நிறுவனம் - ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!
அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பிரபல நிறுவனம் - ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!
அதிரடி நடவடிக்கையை மேற்கொண்ட பிரபல நிறுவனம் – ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து!

சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கிரிப்டோ சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் பிரபல கிரிப்டோ வர்த்தகத் தளமான Wazirx அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கிரிப்டோ :

கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகள் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அமல்படுத்தியது. இதனால் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது. அத்துடன் பொருட்களின் உற்பத்தியும் தடைபட்டதால் பொருளாதார சரிவு ஏற்பட்டது. அதன் எதிரொலியாக தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவிழந்துள்ளது. அதனால் உலக நாடுகள் வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இந்த நிலையில் கிரிப்டோ சந்தையும் சரிவை சந்தித்துள்ளது.

இந்த கிரிப்டோ கரன்சி சந்தை நிலவரத்தை பொறுத்து ஒவ்வொரு நாணயத்தின் மதிப்பு மாறுபடுகிறது. சமீப காலமாகவே உலகளாவிய கிரிப்டோ கரன்சி சந்தை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்து இருந்த முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் பாதுகாப்பான முதலீட்டின் பக்கம் திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கிரிப்டோ வர்த்தகத் தளமான WazirX இந்த வீழ்ச்சியின் காரணமாக செலவுகளை குறைக்க திட்டமிட்டு வருகிறது. இதனையடுத்து நிறுவனத்தின் 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வங்கி தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Study Material!! இது மட்டும் போதும்!! வெற்றி நிச்சயம்!!

Exams Daily Mobile App Download

கடந்த மாதங்களில் சில உயர் அதிகாரிகள் பணியில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது பெரும் பகுதி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் WazirX நிறுவனத்தில் 150 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 50 முதல் 70 ஊழியர்கள் வரையில் பணி நீக்கம் செய்ய பிங்க் ஸ்லிப் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 45 நாள் severance pay அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அலுவலகத்திற்கு நாளை முதல் வர வேண்டாம் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!