மெகா ஹிட் சீரியலில் மாற்றப்பட்டுள்ள முக்கிய கதாபாத்திரம் – புதிதாக வந்துள்ள சர்ச்சை நாயகி!

0
மெகா ஹிட் சீரியலில் மாற்றப்பட்டுள்ள முக்கிய கதாபாத்திரம் - புதிதாக வந்துள்ள சர்ச்சை நாயகி!
மெகா ஹிட் சீரியலில் மாற்றப்பட்டுள்ள முக்கிய கதாபாத்திரம் - புதிதாக வந்துள்ள சர்ச்சை நாயகி!
மெகா ஹிட் சீரியலில் மாற்றப்பட்டுள்ள முக்கிய கதாபாத்திரம் – புதிதாக வந்துள்ள சர்ச்சை நாயகி!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிற்பகல் முதல் இரவு வரை வரிசையாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், ஒரு முக்கிய சீரியலின் கதாபாத்திரம் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக சர்ச்சை நாயகி ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

சர்ச்சை நாயகி:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பத்தில் அதிகம் மொழி மாற்றம் செய்யப்பட்ட சீரியல்கள் தான் ஒளிபரப்பாகி வந்தது. அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து, அடுத்தகட்டமாக தான் நேரடி தமிழ் சீரியல்கள் தொடங்கப்பட்டது. படிப்படியாக ஜீ தமிழ் டிவியின் சீரியல்கள் மீது மக்களின் கவனம் திரும்ப தொடங்கியது. இப்போது ஜீ தமிழ் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வேற லெவல் ரீச் ஆகி அதிக ரசிகர்களை கொண்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில், ஜீ தமிழ் மலர் சீரியல் மூலமாக சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்த வைஷ்ணவி கதாநாயகியாக நடிக்கும் பேரன்பு சீரியல் தற்போது படு ஹிட்டாகி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயின் தங்கையாக ஆர்த்தி வேடத்தில் அக்ஷிதா நடித்து வந்தார். அவர் திடீரென சீரியலில் இருந்து விலகியுள்ளதால், அந்த வேடத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

வாடகை தாய் சர்ச்சையை தொடர்ந்து விபரீத முடிவை எடுத்த நயன்தாரா? ரசிகர்கள் கவலை!

Exams Daily Mobile App Download

அதாவது ஆர்த்தி வேடத்தில் சீரியல் நடிகை ஸ்ரீநிதி நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பல விஷயங்களையும் பகிர்ந்து வந்தார். கடைசியாக பிரபலமாக தான் இதை எல்லாம் செய்தேன் என்று அவரே சொல்லியிருந்தார். ஸ்ரீநிதி ஏற்கனவே யாரடி நீ மோகினி சீரியலில் நடித்திருந்தார். இப்போது பேரன்பு சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் மாஸான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!