TNPSC Group Exams – வரலாறு Quiz 2020 answer

0

Q.1)மௌரிய நிர்வாகத்தில் ‘கண்டக சோதனா’ என்பது  எதைக் குறிப்பிடுகிறது?

a) குற்றவியல் நீதிமன்றம்

b) காவல்துறை

*c) வருவாய்த்துறை

d) நகர நிர்வாகக்குழு

Q.2)சிறு கற்காலத்தில் மேற்கு கடற்கரை, சென்னை மற்றும் இலங்கை ஆகிய  கடற்பகுதிகளில் காணப்பட்ட வளர்ச்சிகள் சுட்டிக் காட்டுவது

a) வணிகத் தொழில்

b) வேளாண்மைத் தொழில்

c) நாடோடி செயல்பாடுகள்

*d) மீன்பிடிக்கும் தொழில்

Q.3) பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு    சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)
A) சுவாமி தயானந்த  சரஸ்வதி 1) பாம்பே அசோஸிஷேன்
B தாதாபாய் நௌரோஜி 2) யாசகம் அல்ல போராட்டம்
C) எஸ்.என். பானர்ஜி 3) வேதங்களுக்குத் திரும்புக
D) பாலகங்காதர திலகர் 4) இந்தியர்  அசோஸியேஷன்

 

குறியீடுகள்:

*a) 3, 1, 4,2

b) 4, 3, 1, 4

c) 2, 4, 1, 3

d) 4, 2, 3, 1

Q.4)பொருத்துக:

பட்டியல் (1) பட்டியல் (2)
A)Dr. அம்பேத்கர் 1) பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை
B) ஜோதிராவ் பூலே 2) சுயமரியாதை இயக்கம்
C) நாராயண குரு 3) நாராயண  பரிபாலனயோகம்
D) )ஈ.வே.ரா. பெரியார் 4) சத்ய சோதக்சமாஜம்

a) 2, 4, 1, 3

b) 4, 1, 2, 3

c) 1, 2, 4, 3

*d)1, 4, 3, 2

Q.5)கால வரிசைப்படுத்துக :

I. 23-ம் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

II. 1806, ஜூலை 10-ம் நாள் முதல் மற்றும் 23-ம் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.

III. அடுத்ததாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.

IV. கர்னல் பான்கோர்ட் என்னும் இராணுவ அதிகாரி இக்காலத்துக்கு முதல் பலியானார்.

a) I, II, III, IV

b)III,IV, II, I

*c)II,IV, I, III

d) IV,III,II, I

Q.6) கி.பி. Q.1893-ல் இவர் கணபதி மற்றும்  சிவாஜி பண்டிகைகள் கொண்டாடுவதன் மூலம் தேசிய உணர்வை துண்டினார்.   கீழ்க்கண்டவற்றுள் தேசிய உணர்வை  துண்டியவர் யார் ?

a)கோபாலகிருஷ்ண கோகலே

*b)பாலகங்காதர திலகர்

c)லாலாலஜபதிராய்

d)தாதாபாய் நவரோஜி

Q.7) கீழ்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது.

  1. a) போர்ச்சுகல் மன்னர் – ஐந்தாம் ஜார்ஜ்
  2. b) போர்ச்சுகீசிய மாலுமி – கொலம்பஸ்
  3. c) போர்ச்சுகீசிய ஆளுநர் – இராபர்ட் கிளைவ்

*d) போர்ச்சுகீசிய வாணிப  – கோவா

தலைமையிடம்.

Q.8) இன்றைய கர்நாடக இசை தோன்றிய காலம்

a)சேரர் காலம்

*b) சோழர் காலம்

c) பாண்டியர் காலம்

d) களப்பிரர் காலம்

Q.9)கூற்று (A) : ஹரப்பா மக்கள் பருத்தியை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்தனர்

காரணம் (R) : ஹரப்பா மக்கள் முதன்முதலில் பருத்தி பயிரிட்டனர்

a) (A) மற்றும் (R) சரியானவை

b) (A) சரி மற்றும் (R) தவறு

*c) (A) தவறு (R) சரி

d) (A) மற்றும் (R) தவறானவை.

Q.10)கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தவில்லை.

a) சாரதா சட்டம் – பெண்குழந்தை குறைந்த பட்ச திருமண வயது

b) விதவை மறுமணம் – ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

c) காந்தி – ஹரிஜன் செய்தி ஏடு

*d) அம்பேத்கார் – ஆத்மிய சபை

Q.11)பொருத்துக

A) சுரேந்திரநாத்பானர்ஜி 1.இந்தியாவின்முதுபெரும் முனிதர்
B)ஜி.சுப்பிரமணியஅய்யர் 2. இந்நதியாவின் பர்க்
C) தாதாபாய் நௌரோஜி 3. காந்தியின் அரசியல்குரு
D) கோபால கிருஷ்ண கோகலே 4. சென்னை மகாஜனசபை

a) 1, 2, 3, 4

b) 2, 1, 4, 3

*c) 2, 4,1, 3

d) 4, 3, 1, 2

Q.12)பூரண சுதந்திரம் கிடைக்கும் வரை செய் அல்லது செத்துமடி என்றும் பூரண  சுதந்திரம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் செத்துமடிய வேண்டும். இதை தவிர எதிலும் நான் நிறைவடைய   மாட்டேன் என்று கூறியவர்.

a) சுபாஷ் சந்திரபோஸ்

*b) காந்திஜி

c) ஜவஹர்லால் நேரு

d) சர்தார் வல்லபாய் படேல்

Q.13)கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியாக   பொருந்தவில்லை?

*a) 1857 இந்திய பெருங்கலகம் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினைக்கு இட்டு சென்றது.

b) இந்திய ஆட்சி கிழக்கிந்திய வணிகக் குழுவிடமிருந்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நடைமுறைக்கு வந்தது.

c) கானிங் பிரபு முதல் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

d) பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் மேக்னா கார்ட்டா’ என்று அழைக்கப்படுகிறது.

Q.14)கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :

கூற்று  (A) : அசோகர் கி.மு.260-ல் கலிங்கப்போர் முடிந்தவுடன் புத்த மதத்துக்கு மாறினார்.

காரணம் (R) : பாப்ரா கல்வெட்டு செய்தி மூலம் கலிங்க போர் முடிந்து 2½ வருட காலம் கழித்தே அசோகர் புத்த மதத்துக்கு மாறினார்

a) (A) மற்றும் (R) தவறானவை

*b) (A) தவறு மற்றும் (R) சரி

c) (A) சரி மற்றும் (R) தவறு

d) (A) மற்றும் (R) சரியானவை

Q.15)கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை கால வாரியாக முறைப்படுத்துக.

I. ஆட்டோமன் துருக்கியர், காண்ஸ்டாண்டிநோபிள் நகரை கைப்பற்றியது.

II. பார்த்தலோமிய டயஸ், முதன்முதலாக ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை சென்று திரும்புதல்.

III. தலைக்கோட்டைப் போரில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்றது.

IV. வாஸ்கோடாகாமா, முதன்முதலாக இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தது.

a) I,II, III, IV

*b) I, II, IV, III

c) III, IV, I, II

d) II,IV,I, III

Q.16)பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?

a) அபுல்பாசல் -ஷாஜகான் நாமா

b) இன்யட்கான் -மகாபாரதம்  மொழி பெயர்த்தல்

*c) அப்துல் ஷமிட் – பாதுஷா நாமா லகோரி

d) அபுல் பாசி- அக்பர் நாமா

Q.17) வேதகாலத்துக்கு பிறகு ஜாதி முறை கீழ்க்கண்ட முறையில் வரிசைப்படுத்தப்படுகிறது

  1. வைசியர்கள்       II. பிராமணர்கள்

III. சத்திரியர்கள்    IV. சூத்திரர்கள்

*a) II,III,I,IV

b) III,IV,II,I

c) IV, I, II, III

d) I,II,III,IV

Q.18)கீழக்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்துக.

I. சிவஸ்கந்தவர்கன்

II. முதலாம் நரசிம்மவர்மன்

III. விஜயாலய சோழன்

IV. முதலாம் பராந்தகன்

*a) I,II,IV,III

b) II,I,III,IV

c) IV,III,I,II

d) I,II,III,IV

Q.19)கீழ்க்கண்டவற்றில் எது சரி:

கானிங் பிரபு பொதுப்பணி பாடச் சட்டப்படி வங்கப் படை வீரர்கள் இந்தியாவில் மட்டும் போரில் ஈடுபடவேண்டும்.

கானிங் பிரபுவின் பொதுப்பணி படைச் சட்டப்படி வங்கப் படை வீரர்கள் இந்தியாவிலும் தேவை ஏற்படின் கடல் கடந்தும் போரில் ஈடுபடவேண்டும்.

a) I மட்டும் சரி

b) II மட்டும் சரி

c) I, II ம் சரி

d) அனைத்தும் தவறு

Q.20)கிழ்க்கண்ட வாக்கியங்களை கவனி

முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்க முக்கிய காரணமாகும்

பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லீம்களை புண்படுத்துவதாக இருந்தது. இவற்றில் எது,எவை சரி?

a) I மட்டும்

b) II மட்டும்

*c) I மற்றும் II

d) அனைத்தும் தவறு

Q.21)கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :

கூற்று  (A) : 1806-ல் வேலூரிலிருந்த இந்திய  சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

காரணம்  (R) : இந்தியாவை வணிகக் குழுவின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுதலை பெற வைப்பதே அவர்களின் நோக்கமாகும்.

இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுது:

a) (A) மற்றும் (R) இரண்டு சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

b) (A) மற்றும் (R) இரண்டு சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

*c) (A)  சரி, ஆனால் (R) தவறு

d) (A) தவறு ஆனால் (R) சரி

Q.22)கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?

a) ஆத்மிய சபை- சுவாமி தயானந்த சரஸ்வதி

b) வங்காள முதல் வார இதழ் – சத்யார்த்த பிரகாஷ்

c) இளம் வங்காள இயக்கம் – வித்யாசாகர்

d) பிரார்த்தனை சமாஜம் – ஆத்மாராம் பாண்டுரங்

Q.23) பட்டியல் (1)-ஐ பட்டியல் (2)-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு    சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)
A) தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் 1) நான்காம் நிலைத் தொழில்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்
B) வெள்ளை கழுத்துப் பட்டை பணியாளர்கள் 2) இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
C) சிவப்பு கழுத்துப் பட்டை பணியாளர்கள் 3) ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
D) நீல கழுத்துப் பட்டை பணியாளர்கள் 4) அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்

குறியீடுகள்

a) 4, 2, 1, 3

b) 1, 3, 2, 4

c) 3, 1, 4, 2

d) 3, 1, 2, 4

Q.24)      இந்தியாவின் முதன்முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்

a) லிட்டன் பிரபு

b) கர்சன் பிரபு

c) கானிங் பிரபு

*d) ரிப்பன் பிரபு

Q.25)கீழ்க்கண்ட வாக்கியக்களைக் கவனி:

கூற்று  (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905ன் ஆண்டின் வங்கப் பிரிவினை தீவிர வாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது

காரணம்  (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி, வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே கர்சனின் உண்மையான நோக்கமாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:

*a) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

b) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்

c) (A) சரி, ஆனால் (R) தவறு

d) (A) தவறு ஆனால் (R) சரி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!