வரலாற்றில் இன்று – மார்ச் 3

0

வரலாற்றில் இன்று – மார்ச் 3

மார்ச் 3

 • கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும்.
 • நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள்.
 • ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

 • 1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.
 • 1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.
 • 1857 – பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.
 • 1878 – ஓட்டோமான் பேரரசின் கீழ் பல்கேரியா விடுதலை அடைந்தது.
 • 1905 – ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (டூமா)வை ஏற்படுத்த இணங்கினான்.
 • 1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
 • 1938 – சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1939 – மும்பாயில் மகாத்மா காந்தி ஆதிக்கவாதிகளுக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
 • 1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.
 • 1966 – பிரித்தானிய போயிங் 707 பயணிகள் விமானம் ஒன்று ஃபியூஜி மலையில் விபத்துக்குள்ளானதில் 124 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.
 • 1971 – இந்தோ-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது.
 • 1974 – பாரிஸ் அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்து மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் கொல்லப்பட்டனர்.
 • 1974 – லூத்தரன் சபைகளுல் சில கத்தோலிக்க திருச்சபையில் இணைந்தன.
 • 1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.
 • 1992 – பொஸ்னியா என்ற நாடு உருவாக்கப்பட்டது.
 • 2002 – சுவிட்சர்லாந்து ஐநாவில் இணைவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தில் மக்கள் வாக்களித்தனர்.

பிறப்புகள்

 • 1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இறப்பு – 1922)
 • 1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இறப்பு – 2014)
 • 1944 – ஜெயசந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்
 • 1950 – திக்குவல்லை கமால், ஈழத்து எழுத்தாளர்.
 • 1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இறப்பு – 2002)
 • 1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்
 • 1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி
 • 1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை

இறப்புகள்

 • 1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பிறப்பு – 1618)
 • 1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர்
 • 2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பிறப்பு – 1930)
 • 2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பிறப்பு – 1929)
 • 2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பிறப்பு – 1962)

சிறப்பு நாள்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!