மார்ச் 27 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள்

  • ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் கல்வி ஆண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது.
  • முதல் கட்டமாக 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு வரும் ஆண்டு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஜிஎஸ்எல்வி – எஃப்08 ராக்கெட் 

  • ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் மார்ச் 29-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

100 ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

  • அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு  அனுமதி

  • தேனியில் அமையவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

 தமிழக அரசு அறிவிப்பு

  • ஆண்டு கணக்கு முடிப்பு பணிக்காக, ஏப்ரல் 2-ம் தேதி வணிக, கூட்டுறவு வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா

டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டம்

  • தனிமனிதரின் உடல்நலன் தகவல்களை அவர்களின் அனுமதியில்லாமல் வெளியிடுபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம் என்று டிஜிட்டல் சுகாதார பாதுகாப்பு வரைவு சட்டத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

 கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்

  • நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு மே -12ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை மே – 15ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உலகம்

ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை சீரமைக்கிறது சிங்கப்பூர்

  • சிங்கப்பூரில் பழம்பெருமை வாய்ந்த ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலை ரூ.20 கோடி செலவில் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

7 பாகிஸ்தான் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

  • அமெரிக்கா வின் தொழில் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, அணு ஆயுத பரவலில் ஈடுபடுவதாகக் கூறி பாகிஸ்தானைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் உட்பட 23 நிறுவனங்களை, தடை பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம் என்எஸ்ஜி-யில் உறுப்பினராகும் பாகிஸ்தானின் விருப்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வணிகம்

பிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியாவுக்கு 67வது இடம்

  • பிப்ரவரி மாதத்தில் பிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியா 67வது இடமும் மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் 109-வது இடத்திலும் உள்ளது என்று இணையதள டெஸ்ட்டிங் மற்றும் ஆய்வு நிறுவனம் ஊக்லா தெரிவித்துள்ளது.

பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு நீட்டிப்பு

  • பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன் மாதம் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
  • இத்துடன் காலக்கெடு நீட்டிப்பு என்பது 4-வது முறையாக வழங்கப்பட்டுள்ளது.

தாராள வர்த்தக ஒப்பந்தப் பணிகள் மீண்டும் தொடங்கின

  • இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு இடையேயான தாராள வர்த்தக ஒப்பந்தத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வர்த் தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

விளையாட்டு

தங்கம் வென்றார் இந்தியாவின் அனிஷ்

  • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய அணி மீண்டும் தோல்வி

  • முத்தரப்பு டி 20 தொடரில் இந்திய மகளிர் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.

நெதர்லாந்திடம் போர்ச்சுக்கல் 3-0 தோல்வி

  • உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் நெருங்குவதை முன்னிட்டு பிரெண்ட்லி கால்பந்தாட்டங்கள் நாடுகளுக்கிடையே நடைபெற்று வருகின்றன.
  • இதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட போர்ச்சுக்கள் அணி நெதர்லாந்திடம் 3-0 என்ற கோல் கணக்கில் அடைந்த தோல்வி அதிர்ச்சிகரமாகப் பார்க்கப்படுகிறது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!