மார்ச் 9 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள்

 • இலங்கைக்கு ஒரு லட்சம் தமிழ் நூல்கள் வழங்க இருப்பதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக டெல்லியில்  முக்கிய ஆலோசனை

 • காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை சார்பில் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடக்கிறது.
 • இதில் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

போலியோ சொட்டு மருந்து 

 • தமிழகம் முழுவதும் வரும் 11-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.
 • இந்த முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.

பெண் ஆட்டோ ஓட்டுநரை கவுரவித்த பெட்ரிசியன் கல்லூரி

 • சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை அறிவியல் கல்லூரி பெண் ஆட்டோ ஓட்டுநர் ஆண்டாளுக்கு தனித்துவம் வாய்ந்த பெண் தொழிலாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

இந்தியா

பத்திரிகையாளர் நலனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1 கோடியாக உயர்கிறது

 • நாடு முழுவதிலும் பணியாற்றும் பத்திரிகையாளர் நலனுக்கான நிதி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட உள்ளது.
 • மத்திய செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் இதை நடப்பு நிதியாண்டிலேயே அமலாக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திரிபுரா முதல்வராக விப்லப் குமார் பதவியேற்பு

 • திரிபுரா மாநில புதிய முதல்வராக பாஜகவின் விப்லப் குமார் தேப் பதவியேற்றுக் கொண்டார்.
 • இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி, திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜக.வின் கடும் எதிர்ப்பையும் மீறி கர்நாடக மாநிலத்துக்கு தனிக் கொடி அறிமுகம்

 • பாஜகவின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மாநிலத்துக்கான தனிக் கொடியை முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தார்.

முன்பதிவு ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு மாற்றலாம் 

 • முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவருக்கு எளிதாக மாற்றிவிட்டு, எந்தவிதமான தொகை பிடித்தமும் இல்லாமல் மாற்றிக்கொள்ளும் முறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
 • அதற்குரிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

உலகம்

பூமியைத் தாக்க வரும் சீன விண்வெளி ஆராய்ச்சி நிலையம்

 • சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் – 1 தனது கட்டுப்பாட்டை இழந்ததினால் பூமியை நோக்கி விழப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 • சீனா டியாங்கோங் -1 என்ற விண்வெளி நிலையத்தை விண்வெளியில் 2016 ஆம் ஆண்டு அனுப்பியது. ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு விண்வெளியில் பெரிய அளவில் நிறுவப்பட்ட சீனாவின் முதல் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இது.

பப்புவா நியூ கினியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 • பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது.
 • இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8-ஆக பதிவாகியுள்ளது.

வணிகம்

கனரக பொறியியல் துறை மேம்பாட்டுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் 60 கோடி டாலர் ஒதுக்கீடு

 • கனரக பொறியியல் துறை மேம்பாட்டுக்கு 60.7 கோடி டாலர் அளவிலான திட்டங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 • காஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளில் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சூப்பர் பைக்குகள் விலை ரூ. 7 லட்சம் வரை குறைப்பு

 • அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இறக்குமதியாகும் பைக்குகளுக்கான வரியை 50 சதவீதமாக மத்திய அரசு குறைத்ததால், ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட இறக்குமதியாகும் பைக்குகளின் விலை 7 லட்சம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

மார்ச் 15-ல் பந்தன் வங்கி ஐபிஓ வெளியீடு

 • கொல்கத்தாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பந்தன் வங்கியின் பொதுப் பங்கு வெளியீடு வரும் 15-ம் தேதி தொடங்குகிறது.

 விளையாட்டு

தோனி, கோலி ஆலோசனையில் உருவாக்கப்பட்ட பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த ஏ+ பிரிவு

 • பிசிசிஐ-யின் புதிய வீரர்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்ட ரூ.7 கோடி ஏ+ பிரிவுக்கு முன்னாள் கேப்டன் தோனியும், இந்நாள் கேப்டன் விராட் கோலியுமே பிரதான காரணம் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த பொறுப்பு கிரிக்கெட் நிர்வாகக் கமிட்டி தெரிவித்துள்ளது.

மகளிர் ஹாக்கியில் ஏமாற்றம்

 • மகளிர் ஹாக்கியில் தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!