தமிழகம்
தமிழகம் முழுவதும் உள்ள 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரலில் தேர்தல்
தமிழகத்தில் 15 அரசுத் துறைகளின்கீழ் உள்ள 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தி முடிக்கப்படும் என்று கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலாளராக கே. சீனிவாசன் நியமனம்
- தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக கே.சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- சட்டப்பேரவைச் செயலக நிருபர் பிரிவில் இருந்து பதவி உயர்வு மூலம் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த கே.சீனிவாசன், கடந்த ஆண்டு இறுதியில் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
தெருவிளக்கு, சாலை, குடிநீர், குப்பை, நாய் தொல்லைக்கு புகார் அளிக்க நம்ம சென்னை மொபைல் ஆப்: தற்போது ஐபோனிலும்…
- பெருநகர சென்னை மாநகராட்சியின் நம்ம சென்னை என்ற புதிய செயலி (Namma Chennai app)தற்போது ios(iphone) என்ற மென்பொருள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து, புகார்களை பதிவு செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியா
உலகின் வலிமையான ராணுவம்: இந்தியாவுக்கு 4-வது இடம்
- 2017-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலை குளோபல் ஃபயர் பவர் (ஜிபிஎப்) அமைப்பு வெளியிட்டுள்ளது.
- இப்பட்டியலில் 133 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 4-வது இடம் பெற்றுள்ளது. முதல் 10 நாடுகள் பட்டியலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பெற்றுள்ளன.
- அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தை பெற்றுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கும் சீருடை
- கல்லூரி மாணவர்களுக்கும் சீருடை திட்டத்தைக் கொண்டு வர ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது.
- ராஜஸ்தானில் ஆளும் பாஜக சார்பில் வசுந்தரா ராஜே முதல்வராகப் பதவி வகிக்கிறார்.
- பள்ளிகளில் உள்ளது போலவே கல்லூரி மாணவர்களுக்கும் வரும் கல்வியாண்டில் இருந்து சீருடை திட்டம் அமல்படுத்தப்படும் என்று மாநில கல்வித் துறை அமைச்சர் கிரண் மகேஸ்வரி கூறியுள்ளார்.
மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்பு
- மேகாலயா மாநில புதிய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.
போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூருவில் ஹெலிகாப்டர் போக்குவரத்து அறிமுகம்
- பெங்களூருவில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து விமான நிலையத்துக்கு செல்ல 2 மணிநேரம் ஆகிறது.
- இந்நிலையில், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஒரு தனியார் நிறுவனம் ( Thumby Aviation) சார்பில் பெங்களூருவில் ஹெலி – டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
- முதல்கட்டமாக, எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் ஹெச்.ஏ.எல். விமான நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து சர்வதேச விமான நிலையத்துக்கு இரண்டு ஹெலிகாப்டர்களை அந்நிறுவனம் இயக்குகிறது.
உலகம்
தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புகிறேன்
- தென் கொரியாவுடன் புதிய வரலாற்றை எழுத விரும்புவதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
- தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வட கொரியா பங்கேற்றது முதல் தென் கொரியா – வட கொரியா இடையே இணக்கம் அதிகரித்துள்ளது.
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கம்
- பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியது. 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
- இந்த நில நடுக்கத்தினால் பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் ஏதும் வராத நிலையில் 67 பேர் இறந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.
வணிகம்
சுசுகி ஜிக்ஸர் 2018, ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் அறிமுகம்
- சுசுகியின் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஜிக்ஸர் மாடல் சிரீஸ் பைக்குகளை தயாரித்து வருகிறது. இந்த வகை பைக்குகளில் 2018-ம் ஆண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுசுகி ஜிக்ஸர் 2018 மற்றும் ஜிக்ஸர் எஸ்எப் பைக்குகள் அறிமுகமாகியுள்ளன.
- சுசுகி ஜிக்ஸர் 80,928 ரூபாய் விலையிலும், ஜிக்ஸர் எஸ்எப் பைக் 90,037 ரூபாய் விலையிலும் (டெல்லி எக்ஸே ஷோரும் விலை) கிடைக்கின்றன.
- இளைஞர்களை அதிகம் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்குகள், சிகப்பு, சில்வர், மெட்டாலிக் ப்ளூ மற்றும் கருப்பு வண்ணங்களில் கிடைக்கின்றன.
பறக்கும் கார் தயாரிப்பில் போர்சே: நிறுவன உயரதிகாரி தகவல்
- போர்சே கார் நிறுவனம் பறக்கும் கார் தயாரிப்பை மேம்படுத்தி வருகிறது. இந்த தகவலை அந்த நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரி டெட்லெவ் வோன் பிளாண்டன் கூறியுள்ளார்.
- மேலும் பெரு நகரங்களின் பறக்கும் டாக்சி சேவையில் ஈடுபடுவதற்கான சாத்தியமும் உள்ளது என்றார்.
மகளிர் தினம்: பெண்கள் இயக்கிய ஏர் இந்தியா விமானம்
- சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, ஏர் இந்தியா ஏர்பஸ் 319 ரக விமானத்தை முழுக்க முழுக்க பெண் ஊழியர்களைக் கொண்டு இயக்கியுள்ளது.
விளையாட்டு
உலக துப்பாக்கி சுடுதலில் மனு பாகருக்கு தங்கம்
- உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான இந்திய வீராங்கனையான மனு பாகர் 2-வது தங்கப் பதக்கம் வென்றார்.
- உலக துப்பாக்கி சுடுதல் போட்டி மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது.
- இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஏற்கெனவே தங்கப் பதக்கம் வென்றிருந்த இந்திய வீராங்கனை மனு பாகர், அணிகள் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளார்.
மகளிர் ஹாக்கி போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தியது இந்தியா
- தென் கொரியா மகளிர் அணிக்கு எதிரான ஹாக்கித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் போட்டி சியோல் நகரில் நடைபெற்றது.
- 5-வது நிமிடத்திலேயே இந்திய அணி தனது முதல் கோலை அடித்தது. இந்த கோலை லால்ரெம்ஷியாமி அடித்தனார்.