மார்ச் 5 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

ரூ.200 கோடியில் திட்டம் – சென்னை மாநகராட்சி நடவடிக்கை

 • சென்னை மாநகராட்சியில் பல மாதங்களாக பழுதடைந்து கிடந்த 2 ஆயிரத்து 917 சாலைகளை ரூ.200 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
 • தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள 15 பேருந்து தடச் சாலைகள், 2 ஆயிரத்து 902 உட்புறச் சாலைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 917 சாலைகளை சீரமைக்க ரூ.200 கோடியே 17 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.
 • அதனைத் தொடர்ந்து அந்த நிதியில் தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

பத்திரப்பதிவுத் துறை இணையதளத்தில் சிறப்பாக செயல்படும் சார் பதிவாளர் புகைப்படத்தை வெளியிட திட்டம்

 • தமிழகத்தில் ஆன்லைன் பத்திரப் பதிவு முறையை சிறப்பாக செயல்படுத்தும் சார் பதிவாளர்களைப் பாராட்டும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் பதிவுத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

ஜூன் 3-ல் ஜிப்மர் நுழைவுத்தேர்வு: வரும் 7-ம் தேதி முதல் ஏப்.13 வரை விண்ணப்பிக்கலாம்.

 • புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.
 • வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது.
 • எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் ( www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும்.
 • மொத்தமுள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியா

மீண்டும் தொடங்குகிறது 3வது அணி முயற்சி: பாஜக – காங்கிரஸூக்கு மாற்றாக புதிய கூட்டணி

 • பாஜக மற்றும் காங்கிரஸூக்கு மாற்றாக தேசிய அளவில் புதிய அணியை உருவாக்க, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு பல்வேறு கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காவிரி விவகாரம்: தமிழகம், கர்நாடகம் உள்பட 4 மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு

 • காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்களின் பிரதிநிதிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

எஸ்எஸ்சி தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம்

 • பிப்ரவரி மாதம் 17 முதல் 21-ம் தேதி வரை நடந்த சார்நிலை பணியாளர் (எஸ்எஸ்சி) தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் புகார் எழுந்தது.
 • இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார்.

உலகம்

டே சீரோ – தென்னாபிரிக்கா 

 • தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரம் விரைவில் ‘டே சீரோ’ என்ற நிலையை எட்டவிருக்கிறது
 • வரும் ஏப்ரல் 12-ம் தேதி உலகிலேயே முதன்முறையாக ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்கு போகப்போகிறது.

சீனாவின் நிரந்தர அதிபராகும் ஜி ஜின்பிங்

 • சீனாவில் ஒருவர் 2 முறைதான் அதிபர் பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனையில் திருத்தம் கொண்டு வரும் தீர்மானம் நிறைவேறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 • இந்த தீர்மானம் நிறைவேறுவதன் மூலம் ஜி ஜின்பிங்கின் தற்போதுள்ள செல்வாக்கை கருத்தில் கொண்டால் அவர் சீனாவின் நிரந்தர அதிபராக தொடருவார் என்று சீன அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்னர்.

சிரியாவில் அரசுப் படைகளின் தாக்குதல் தொடரும்: பஷார் அல் ஆசாத்

 • சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்துள்ளார்.

வணிகம்

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பிராண்ட் ஸ்டோர்

 • இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வந்த பிறகு இதை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
 • இந்தியாவில் தங்கள் தயாரிப்புகளுக்கான விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பெரு நகரங்களில் தனது பிரத்யேக விற்பனையகத்தை (பிராண்ட் ஸ்டோர்) அமைக்க இந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
 • தற்போது இந்தியாவில் 26 விற்பனையகங்கள் உள்ளன. இந்த விற்பனையகங்களில் பிராண்டுகளின் பிற தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

மறுவிற்பனை போன் சந்தையாகும் இந்தியா

 • இந்தியாவின் நுகர்பொருள் சந்தை ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
 • குறிப்பாக தற்போது நுகர்பொருள் சந்தையில் உலக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியா, 2025-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது மிகப் பெரிய சந்தையாக உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
 • ரூ. 4 லட்சம் கோடி சந்தையைக் கொண்டிருக்கும். இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்துவதற்கு ஏற்ப சர்வதேச பிராண்டுகள் பலவும் இந்தியாவில் உற்பத்தி ஆலை உட்பட பல கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

விளையாட்டு

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் ரிஸ்வி

 • உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ரிஸ்வி சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

கொல்கத்தா கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

 • ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

தல் மெமோரியல் ரேபிட் செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன்

 • ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த ‘தல் மெமோரியல் ரேபிட் செஸ்’ போட்டியில் உலக ராபிட் செஸ் சாம்பியனும் இந்தியரும், தமிழருமான விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முதல் டெஸ்டில் ஆஸி.வெற்றி

 • டர்பனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!