மார்ச் 1 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

வீராணம் தண்ணீர் நிறுத்தம்: சென்னைக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல்?

 • வீராணம் ஏரியில் தண்ணீர் அளவு இரண்டு அடிக்கும் கீழே சென்றதால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது.  இதனால் சென்னையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
 • மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீர், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் சேமிக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்பப்படுகிறது.
 • இந்நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரின் அளவு கடந்த சில தினங்களாகவே குறைந்து வந்தது. தற்போது அது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் காலமானார்!

 • உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89.

இந்திய அரசின் உதவியுடன் மலையக மக்களுக்கு 10,000 வீடுகள்: இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

 • மலையக மக்களுக்கு இந்திய அரசின் சார்பாக 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • பிரதமர் மோடி, ”மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
 • மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவர்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்” என அறிவித்தார்.

இந்தியா

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக.வுக்கு வெற்றி: கருத்துக்கணிப்பில் தகவல்

 • திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகாலயத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் – பாஜக இடையே இழுபறி நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 • இந்த மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் குறித்து சிவோட்டர் நிறுவனத்தின் சார்பிலும், ஆக்சிஸ் மை இந்தியா மற்றும் நியூஸ் 24 நிறுவனங்களின் சார்பிலும் தனித்தனியாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

மாகாண சிவில் சர்வீஸ் தேர்வு: 

 • உத்தரகண்ட் மாநிலம் டேராடுடனை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மகள் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாட்டம் தொடங்கியது

 • ‘ஹோலிகா தெஹன்’ என அழைக்கப்படும் விறகு குவியலை நள்ளிரவில் எரித்த பின் தொடங்கியது.
 • ஹோலியில், பல வண்ண நிறங்களிலான தூளை வீசியும், வர்ணங்களை பீச்சி அடித்தும் மக்கள் கொண்டாடினார்கள். தங்களுக்குள் இனிப்புகளை பரிமாறி உண்டு மகிழ்வதும் வழக்கம்.
 • பொதுமக்கள், அரசியல் தலைவர்களும் தங்களுக்குள் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டு மகிழ்வதும் உண்டு.

உலகம்

புகுஷிமா அணு உலையில் 100 மடங்கு கதிர் வீச்சு: 

 • ஜப்பானின் புகுஷிமா அணு உலை பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 100 மடங்கு அதிகமான கதிர் வீச்சு இருப்பதாக ‘கிரீன் பீஸ்’ அமைப்பு எச்சரித்துள்ளது.

கனடா பிரதமரின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்குஇந்தியாவுக்கு அனுமதி மறுப்பு: ஊடகத் தகவலால் பரபரப்பு

 • கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் விருந்தினர் பட்டியலை பரிசீலிப்பதற்கு இந்திய அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகத்தில் செய்திகள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வணிகம்

இந்தியாவின் டிசம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சி 7.2 சதவீதம்

 • இந்தியாவின் டிசம்பர் காலாண்டு ஜிடிபி 7.2 சதவீதமாக இருக்கிறது.
 • இதன் மூலம் டிசம்பர் காலாண்டில் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கிறது.

சர்வதேச பிராண்டுகளின் வளர்ச்சி 5 மடங்கு அதிகரிக்கும்: அசோசேம் கணிப்பு

 • அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச பிராண்டுகளின் வளர்ச்சி ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று அசோசேம் கணித்துள்ளது.
 • மக்களிடையே வாங்கும் திறன் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு டிசம்பரில் சர்வதேச பிராண்டுகளின் விற்பனை சந்தை 3000 கோடி டாலர் அளவுக்கு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
 • இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சர்வதேச பிராண்டுகளின் விற்பனை 2,380 கோடி டாலராக உள்ளது.

விளையாட்டு

தெ.ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் மோதல்

 • தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  டர்பனில் தொடங்குகிறது.

லாரஸ் விருதை வென்றார் பெடரர்

 • விளையாட்டு துறையில் மிக உயர்வாக கருதப்படும் லாரஸ் விருதை ரோஜர் பெடரர் வென்றார். மேலும் இந்த ஆண்டில் மீண்டு வந்த வீரர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
 • இந்த விருதை கைப்பற்ற ஸ்பெயினின் ரபேல் நடால், ரியல்மாட்ரிட் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 36 வயதான ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார்.
 • 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள அவர், கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருந்தார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!