மார்ச் 23 – நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

பிளஸ் 1 பொதுத் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது

 • நடைபெற்று வரும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கொண்டு வருவோம்

 • எப்பாடுபட்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கு கொண்டு வருவோம் என்று முதல்வர் கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

துணை முதல்வர் – ஓ.பன்னீர்செல்வம்

 • சட்டப்பேரவையில் 2017-18-ம் ஆண்டுக்கான ரூ.10,940 கோடிக்கான இறுதி துணை மதிப்பீடுகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

வானிலை மைய முன்னாள் இயக்குநர் தகவல்

 • இயற்கைப் பேரிடர் மற்றும் காலநிலை முன்னறிவிப்பை அறிந்து, மக்களும் அரசும் செயல்பட்டால் காலநிலைப் பேரிடர் அழிவைக் குறைக்க முடியும் என்று இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குநர் டி.ஆர்.சிவராமகிருஷ்ணன் கூறினார்.
 • உலக வானிலை தினம் (மார்ச் 23)

இந்தியா

பொக்ரானிலிருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

 • ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சோதனை மையத்திலிருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை  வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒரு ஆப்ஸ், 100 சேவைகள்

 • இணையம் பயன்படுத்துவது மனிதர்களின் உரிமை என்று நாட்டிலேயே முதல்முறையாக அறிவித்த கேரள மாநிலம், அங்கிருக்கும் மக்களுக்காக ஒரே ஆப்ஸ் மூலம் 100 சேவைகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது.
 • ‘எம்கேரளா’ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் அரசின் 20 துறைகளில் இருந்து மக்கள் தங்களுக்கு தேவையான 100 சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

உலகம்

சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரி

 •  சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

கவுடாவிலிருந்து வெளியேறிய கிளர்ச்சியாளர்களின் ஒரு பிரிவினர்

 • ரஷ்யாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி கிளர்ச்சியாளர்களின் ஒரு குழுவினர் கவுட்டாவிலிருந்து வெளியேறியுள்ளனர்.

வணிகம்

எஸ்எப்எல் நிர்வாக இயக்குநர் ஆர்த்தி கிருஷ்ணா

 • டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான சுந்தரம் பாசனர்ஸ் லிமிடெட் (எஸ்எப்எல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஏப்ரல் 20-ம் தேதி பொறுப்பேற்கிறார் ஆர்த்தி கிருஷ்ணா.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் ஹைதராபாத் நிறுவனம் ரூ.1,394 கோடி மோசடி

 • யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கடன் வாங்கி ரூ.1,394 கோடி முறைகேடு செய்ததாக ஹைதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி

 • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் உலக சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.

இந்திய மகளிர் அணி தோல்வி

 • முத்தரப்பு டி 20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

நியூஸிலாந்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி

 • நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 20.4 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிரென்ட் போல்ட் 6 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here