பிப்ரவரி 15 நடப்பு நிகழ்வுகள்

0

தமிழகம்

16.02.2018 முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: மின் தடை ஏற்பட வாய்ப்பு

 • ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி மின் ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

 1. மின் ஊழியர்  மத்திய அமைப்பின் தலைவர் சுப்பிரமணியன்
 2. மின்துறை அமைச்சர் தங்கமணி

எய்ம்ஸ் அமையும் இடத்தை முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 மாதம் அவகாசம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 • தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை இறுதி செய்ய 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்த நிலையில் உயர் நீதிமன்றம் 4 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.

சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 90 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கும் என இயக்குனர் தகவல்

 • சென்னை பெருநகர மாநகராட்சியின் ஆலந்தூர் மண்டலம் மற்றும் மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையம் சார்பில் பெருநிறுவன சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் ரூ.32.6 லட்சம் செலவில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கவும், இதற்கான கட்டுமான கட்டிடங்கள் கட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி நடந்தது.
 • பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி முன்னிலையில் சென்னை விமான நிலைய ஆணைய இயக்குனர் சந்திரமவுலி, சென்னை பெருநகர மாநகராட்சி ஆலந்தூர் மண்டல உதவி கமிஷனர் ராமமுர்த்தி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

முக்கியமான குறிப்புக்கள்

 1. சென்னை விமான நிலையம் – மும்பை, தில்லி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக முக்கியமாக உள்ள வானூர்தி நிலையமாகும்.
 2. 1400 ஏக்கர் பரப்பளவில் கடல் மட்டத்தில் இருந்து 34 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்தியா

அறிவுசார் வளர்ச்சிக்காக எம்.சி..எம். மற்றும் ..டிஹைதராபாத் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து

 • பரஸ்பர அறிவுசார் வளர்ச்சிக்காக எம்.சி.இ.எம்.இ மற்றும் ஜ.ஜ.டி – ஹைதராபாத் உடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
 • இந்த ஒப்பந்தத்தில்  இரண்டு நிறுவனங்களுக்கிடையே கல்வி அதிகரிப்பு மற்றும் மின்னணு அறிவியலை மேம்படுத்துவதற்காக  ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

முக்கியமான குறிப்புக்கள் 

 1. ஜ.ஜ.டி(IIT) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டது
 2. பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்விநிலையம்.

மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர பொன் விழாவில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி கோவிந்த்

 • மார்ச் மாதம் இரண்டாவது வெளிநாட்டு அரசுமுறை சுற்றுப்பணம் செல்ல இருக்கும் ஜனாதிபதி கோவிந்த், மொரீஷியஸ் நாட்டின் 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

முக்கியமான குறிப்புக்கள்

 1. பிறப்பு – 1 அக்டோபர் 1945
 2. இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராவர்

உலகம்

தென் ஆப்பிரிக்காவின் அடுத்த அதிபராகிறார் சிரில் ரமபூசா

 • தென் ஆப்பிரிக்காவின் அதிபராக இருந்த ஜேக்கப் ஜூமா பதவி விலகியதையடுத்து அடுத்த அதிபராக சிரில் ரமபூசா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

முக்கியமான குறிப்புக்கள்

 1. பிறப்பு: 17 நவம்பர் 1952
 2. தென்னாப்பிரிக்க அரசியல்வாதியும், தொழிலதிபரும், செயல்திறனாளரும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார்.

நேபாள நாட்டின் அடுத்த பிரதமராக சர்மா ஒலி தேர்வு

 • நேபாள பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டணியை சேர்ந்த சர்மா ஒலி அடுத்த பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வணிகம்

உலகின் அதிக மதிப்புள்ள நிறுவனங்கள்: மைக்ரோசாப்டை முந்தியது அமேசான்

 • அமேசான் நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால், உலகின் அதிக மதிப்புள்ள நிறுவனம் என்ற பட்டியலில் மைக்ரோசாப்டை முந்தியுள்ளது.

முக்கியமான குறிப்புக்கள்

 1. நிறுவியது – 1994
 2. நிறுவனர் – ஜெஃப் பெஸோஸ்

விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து: செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணிசாம்பியன்

 • சட்டக்கல்லூரி அணிகளுக்கு இடையிலான அகில இந்திய விளையாட்டு போட்டிகள் கொல்கத்தாவில் நடந்தது.
 • இதில் கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் 16 அணிகள் கலந்து கொண்டன.
 • இதன் இறுதிப்போட்டியில் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி அணி 25–8, 25–17 என்ற நேர்செட்டில் சிம்போசிஸ் சட்டக்கல்லூரி (ஐதராபாத்) அணியை தோற்கடித்து முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முக்கியமான குறிப்புக்கள்

 1. ஆசியாவில் இந்தியா 5 வது இடத்திலும், உலகில் 27 வது இடத்திலும் உள்ளது.
 2. 2003 உலக இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்தது. 

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here