
இனி, Instagram-ல் Reels அள்ளும்…நேரம் நீட்டிப்பு…! ” உங்களுக்கு இது பத்தி தெரியுமா..? தெரியாதவங்க உடனே பாருங்க”..!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களில் மூழ்கி உள்ளனர். மேலும், சிலர் Instagram,Youtube போன்ற செயலியில் தனக்கென ஒரு கணக்கை தொங்கி, Reels செய்து வருகின்றனர். இவ்வாறு Reels செய்பவர்கள் மக்களால் வெகுவாக கவரப்பட்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்கின்றனர். இதுமட்டுமின்றி, இதன்மூலம் இவர்களுக்கு திரையுலகில் நுழையவும் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், Instagram-ல் ஏற்கனவே 90 வினாடிகளுக்கு வரும் Reels வீடியோவை, தற்போது 3 நிமிடங்களாக உயர்த்த மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவில் Tik Tok செயலி தடை செய்யப்பட்டதால், அதிலிருந்து வெளியேறும் பயனர்களை கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
























