IND vs AUS 1st Test: 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.. சொந்த மண்ணில் சரிந்த ஆஸ்திரேலியா!!
இந்திய அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முதல் விளையாடி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி சிறப்பாக நடைபெற்று வந்தது. இப்போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களும், இந்தியா அணி 150 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் 46 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2வது இன்னிங்ஸில் 487 ரன்கள் அடித்து டிக்லர் செய்தது. இதன் மூலம், 534 ரன்களை இலக்காக கொண்டு தனது 2வது இன்னிங்கிஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி , 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.


























