9 மற்றும் 11ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து – அரசு அறிவிப்பு!!

0
9 மற்றும் 11ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து - அரசு அறிவிப்பு!!
9 மற்றும் 11ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து - அரசு அறிவிப்பு!!
9 மற்றும் 11ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து – அரசு அறிவிப்பு!!

டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மதிப்பீடு முறை குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இறுதி தேர்வுகள் ரத்து:

கொரோனா தொற்று பரவல் காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் 9 மற்றும் 11ம் வகுப்பு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று உத்தரவிட்டுள்ளார். டெல்லி அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு செயல்முறை நாளை மாலை தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்றும், சேர்க்கை பட்டியல் ஜூலை 14 க்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – CEO சுற்றறிக்கை!

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இடைப்பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இறுதி தேர்வுகள் நடத்த முடியவில்லை. இடைக்காலத்தில் மாணவரின் செயல்திறனை அடிப்படையாக கொண்டு முடிவை அறிவிக்க மாநில கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இடைப்பருவ மற்றும் இறுதி தேர்வுகளை நடத்திய தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிப்பதில் சிக்கல் இல்லை.

TN Job “FB  Group” Join Now

இடைப்பருவத் தேர்வுகள் நடத்தப்படாத பள்ளிகள் மற்றும் ஒரு சில பாடங்களுக்கு மட்டுமே தேர்வு நடத்திய பள்ளிகள், சிறந்த இரண்டு பாடங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இருப்பினும், அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி செய்யப்படுவார்கள். டெல்லி அரசு பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்படும். இது குறித்த விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!