10 நாட்களில் 13 திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 – அதிரடி அறிவிப்பு!

0
10 நாட்களில் 13 திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 - அதிரடி அறிவிப்பு!
10 நாட்களில் 13 திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 - அதிரடி அறிவிப்பு!
10 நாட்களில் 13 திகில் படங்களை பார்த்தால் ரூ.95,000 – அதிரடி அறிவிப்பு!

அமெரிக்காவில் இயங்கி வரும் FitBit என்ற ஒரு நிறுவனம், பார்வையாளர்களின் திறனை ஆய்வு செய்யும் நோக்கத்தில் 10 நாட்களில் 13 திகில் படங்களை பார்க்கும் நபர்களுக்கு சுமார் ரூ.95,000 வரை பணம் தருவதாக அறிவித்துள்ளது.

திகில் படங்கள்

பொதுவாக எந்தவொரு துறையிலும் புதிய முன்னெடுப்புகளை மேற்கொள்ள விரும்பும் நிர்வாகங்கள் சில வேடிக்கையான அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமானது. அப்போது தான் அந்த நிறுவனத்தை நோக்கி வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்பது முதலீட்டாளர்களின் யுக்தியாக கருதப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரை இலவசம் என்பது தான் வாடிக்கையாளர்களை கவருவதற்கு பொதுவாக கையாளப்படும் வியாபார யுக்தியாகும்.

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – மனநல ஆலோசனை!

ஆனால் வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிடுவதில் நம்மை விட வெளிநாட்டினர் எப்போதும் ஒருபடி மேலே தான் இருப்பார்கள். அந்த வகையில் நீண்ட நேரம் தூங்குவது, நிறைய உணவு உண்பது, வித்தியாசமான ஆடைகளில் தோன்றுவது உள்ளிட்ட வேடிக்கையான அறிவிப்புகளை அவ்வப்போது நாம் கடந்து வந்திருப்போம். அந்த வரிசையில் தற்போது 10 நாட்களில் 13 திகில் திரைப்படங்களை பார்க்கும் நபர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை சலுகையாக காத்திருக்கிறது.

பொதுவாக திரைப்படங்களை பார்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த பொதுவான பொழுதுபோக்காகும். ஆனால் பயம் காரணமாக திகில் திரைப்படங்களை சிலர் தவிர்த்து விடுவது உண்டு. அந்த வகையில் பயமுறுத்தும், கொடூரமான திகில் திரைப்படங்களை பார்ப்பதை நீங்கள் விரும்புபவராக இருந்தால் அமெரிக்காவை சேர்ந்த FitBit என்ற ஒரு நிதி நிறுவனம் 1,300 டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.95,000 செலுத்துவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்புடைய CNN அறிக்கையின்படி, ஒரு திரைப்படத்தின் பட்ஜெட் பார்வையாளர்களின் செயல்திறனில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடிப்பதே இதன் நோக்கமாகும். அந்த வகையில் ‘ஹாரர் மூவி ஹார்ட் ரேட் ஆய்வாளர்’ என்று பெயரிடப்பட்ட இத்திட்டத்தில் ஒரு நபர் 13 பயங்கரமான திரைப்படங்களை பார்ப்பார். அப்போது அவரது இதய துடிப்பு, FitBit நிறுவனத்தின் மூலம் கண்காணிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநர் ஆக ஆர்.என். ரவி – செப்.18ம் தேதி பதவியேற்பு!

இந்த ஹாரர் பீஸ்ட் படங்களின் பட்டியலில் உள்ள 13 திரைப்படங்களை பொருத்தளவு – சா, அமிட்டிவில்லே ஹாரர், கொயட் பிளேஸ், கொயட் பிளேஸ் பார்ட் 2, கேன்டி மேன், இன்சைடியஸ், த பிளையர் விட்ச் ப்ராஜக்ட், கெட் அவுட், தி பர்ஜ், ஹாலோவீன், பாராநார்மல் ஆக்டிவிட்டி, அனபெல் ஆகியவை அடங்கும். இப்போது இந்த சலுகைக்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை கொடுக்கப்பட இருக்கிறது. இருப்பினும், போட்டியில் கலந்து கொள்பவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here