TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 95% பேருக்கு தொடரும் வீட்டில் இருந்தே வேலை!

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 95% பேருக்கு தொடரும் வீட்டில் இருந்தே வேலை!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - 95% பேருக்கு தொடரும் வீட்டில் இருந்தே வேலை!
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – 95% பேருக்கு தொடரும் வீட்டில் இருந்தே வேலை!

கொரோனா நோய்த் தொற்றுக்கு பிறகு மீண்டும் அலுவலகங்களை திறக்க பல்வேறு IT நிறுவனங்கள் திட்டமிட்டு வரும் நிலையில், TCSன் 95%க்கும் அதிகமான ஊழியர்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

WHF வேலை

கடந்த 2020ம் ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பேரலைத்தொற்று சூழலுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப துறைகள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்தது. அந்த வகையில் IT நிறுவன ஊழியர்கள் கிட்டத்தட்ட 2 வருடங்களாக தங்களது வீடுகளில் இருந்தபடியே வேலைகளை தொடருகின்றனர். இப்படி இருக்க தற்போது நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று ஓய்ந்திருக்கும் சூழலில் முன்னணி IT நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகத்திற்கு வரவழைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஏப்ரல் முதல், வாரத்தில் மூன்று நாட்களுக்கு 50,000 ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதை TCS எதிர்பார்த்துள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் விரைவில் அமல்!

மேலும் அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை 95 சதவீத டிசிஎஸ் ஊழியர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்வதால், நிறுவனம் ஏப்ரல் முதல், வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு 50,000 மூத்த ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்து, அலுவலகத்திற்குத் திரும்பும் நபர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்று ராஜேஷ் கோபிநாதன் கூறி இருக்கிறார். தொடர்ந்து 2023ம் ஆண்டின் நடுப்பகுதியில், இந்த நிறுவனம் 20 சதவிகித ஊழியர்களை அலுவலகங்களிலிருந்தும், 80 சதவிகிதம் ஊழியர்களை வீட்டிலிருந்தும் வேலை செய்ய அனுமதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, TCS நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் ’25 x 25 x 25′ என்ற வொர்க் மாடலில், 2025 ஆம் ஆண்டுக்குள் 25 சதவிகித ஊழியர்கள் மட்டுமே எந்த நேரத்திலும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் மற்றவர்கள் வீட்டில் இருந்து வேலை (WFH) செய்யலாம் என தெரிவித்துள்ளது. தற்போது இந்த நிறுவனம், 95-5 அதாவது வீட்டில் இருந்து வேலை செய்யும் 95 சதவீத ஊழியர்கள் மற்றும் அலுவலகங்களில் 5 சதவீதம் பேர் என்ற மாதிரியில் இயங்குகிறது என்றும், அவர்கள் 80-20 என்ற சாதாரண மாடலுக்குத் திரும்ப வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!