10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி – குறைந்த தேர்ச்சி விகிதம்!

0
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி - குறைந்த தேர்ச்சி விகிதம்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி - குறைந்த தேர்ச்சி விகிதம்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி – குறைந்த தேர்ச்சி விகிதம்!

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் மற்றும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது

பொதுத்தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இன்றுதான் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 9,12,620 பேர் எழுதியுள்ளனர். இதில் 8,21,994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 90.7% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டு மாணவர்களை விட மாணவிகளே கூடுதலாக 9% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 886 அரசு பள்ளிகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தேர்வெழுதிய 242 சிறைக்கைதிகளில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

தமிழில் ஒருவர் மட்டுமே 100 மதிப்பெண் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 45 பேரும், கணிதத்தில் 2186 பேரும், அறிவியலில் 3841பேரும், சமூக அறிவியலில் 1009 பேரும் சதம் அடித்துள்ளனர். மாவட்டம் வாரியாக பார்த்தால் கன்னியாகுமரியில் தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது கன்னியாகுமரியில் 97.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்ச தேர்ச்சியாக வேலூரில் 79.87% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 65 மாணவர்கள் 500 க்கு 495 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

564 பேர் 491 மதிப்பெண் முதல் 495 மதிப்பெண் வரையும், 1439 பேர் 486 மதிப்பெண் முதல் 490 மதிப்பெண் வரையும் பெற்றுள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தேர்ச்சி விகிதம் இந்தாண்டு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் மற்றும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கூடிய விரைவில் மறு தேர்வு நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here