தமிழகத்தில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் – அரசாணை வெளியீடு!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் மின்சார துறை என்பது முக்கியமான துறைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்க தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மின் இணைப்பு மானியம்:

அரசின் மிகவும் அத்தியாவசிய துறைகளில் ஒன்றாக மின்சாரத் துறை இருக்கிறது. இந்நிலையில் ஏழை எளிய மக்களின் பொருளாதார முன்னேற்றமே, அவர்களின் சமூக நீதியாக இருக்கும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதனால் மின்சாரம் தொடர்பாக பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் மக்களுக்கு 100யூனிட் வர இலவச மின்சாரம் வழங்கி இருக்கிறது. இந்நிலையில் தற்போது மின்சார கட்டணம் உயர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் புது மின்சார கட்டணம் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மின்சார கட்டணம் உயர்ந்தாலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கு வழங்கப்படும் மானியம் கட்டாயம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சகத்தின் 2022-2023-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்புத் திட்டத்தில் (Tatkal Scheme) செலுத்தப்பட வேண்டிய வைப்புத் தொகை குதிரைத் திறனுக்கேற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது

ரேஷன் கார்டு திட்டத்தில் வரவுள்ள அதிரடி மாற்றம் – இனி மளிகை பொருட்கள் வாங்க முடியாது! பொதுமக்கள் அதிர்ச்சி!

Exams Daily Mobile App Download

இந்த திட்டம் மூலமாக 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, மின் இணைப்பு பெற 90 சதவீதம் மானியம் வழங்கப்படும் எனவும் அதற்காக அரசிற்கு ரூ.23.37 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து வெளியான அரசாணையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 900 ஆதிதிராவிடர் விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் ரூ.21,03,97,500/- மற்றும் 100 பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2,33,10,000/- 90 சதவீத மானியத் தொகையாக மொத்தம் ரூ.23,37,07,500/- நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசாணை(நிலை)எண்.74, ஆதி(ம)பந(சிஉதி) துறை, நாள்.29.08.2022-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here