ராணுவ தொழில்நுட்ப துறையில் எக்கச்சக்க காலிப்பணியிடம் – ரூ.1,77,500 வரை சம்பளம்!! உடனே விண்ணப்பிக்கவும்!!
ராணுவ தொழில்நுட்ப துறையில் காலியாகவுள்ள பணியிடம் குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடம்:
இந்தியாவில் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் காலியாகவுள்ள 90 பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 02.01.2005 ஆம் தேதி முதல் 01.01.2008க்குள் பிறந்த 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்கும் இளைஞர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், 12ஆம் வகுப்பில் கட்டாயமாக 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பணியில் சேறும் இளைஞர்களுக்கு மாத சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும்.
ரேஷன் கார்டுதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – நவ.18 குறைதீர் முகாம்!!
மேலும், இந்த பணியிடத்திற்கு பிளஸ் 2, JEE மெயின் தேர்வில் பெறும் மதிப்பெண் மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்படுவார்கள். திறமையும் தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக www.joinindianarmy.nic.in என்கிற இணையதள பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.