Airtel, Jio, Vi மற்றும் BSNL ன் புதிய 9 டேட்டா திட்டங்கள் – தினசரி வரம்பற்ற கூடுதல் சலுகை!

0
Airtel, Jio, Vi மற்றும் BSNL ன் புதிய 9 டேட்டா திட்டங்கள் - தினசரி வரம்பற்ற கூடுதல் சலுகை!
Airtel, Jio, Vi மற்றும் BSNL ன் புதிய 9 டேட்டா திட்டங்கள் - தினசரி வரம்பற்ற கூடுதல் சலுகை!
Airtel, Jio, Vi மற்றும் BSNL ன் புதிய 9 டேட்டா திட்டங்கள் – தினசரி வரம்பற்ற கூடுதல் சலுகை!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு டேட்டா பேக் திட்டங்களுடன் Freedom திட்டங்களையும் வகுத்துள்ளன. இவை ஒரு பயனருக்கு தினசரி வரம்பற்ற டேட்டாவுடன் சில கூடுதல் நன்மைகளையும் அளிக்கிறது.

டேட்டா திட்டம்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் அதன் பயனர்களுக்காக Freedom திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இவ்வகை Freedom திட்டங்கள் ஒரு பயனருக்கு வரம்பற்ற தினசரி டேட்டாக்களை வழங்குகின்றன. அதாவது இந்த திட்டங்கள் வழங்கும் டேட்டாக்களில் தினசரி 1 GB அல்லது 2GB என்ற குறிப்பிட்ட வரம்பு (limit) இருக்காது. இந்த திட்டங்களுக்கான செல்லுபடி நாட்கள் 30 ஆகும். குறிப்பிப்பட்டுள்ள இந்த 30 நாட்கள் தவிர, 15, 60, 90 மற்றும் 365 நாட்கள் செல்லுபடியாகும் Freedom திட்டங்களை ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

தமிழக கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் மாணவர் சேர்க்கை – உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

அதே சமயத்தில் ஜியோவின் போட்டி நிறுவனமான ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகியவையும், தனது வாடிக்கையாளர்களுக்கு தினசரி வரம்பில்லாமல் டேட்டா திட்டங்களை அளிக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவைப் போலவே, ஏர்டெல் மற்றும் வோடாபோன் பயனர்களுக்கும் வரம்பற்ற தினசரி டேட்டா திட்டங்கள் வெவ்வேறு செல்லுபடி காலங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடன் பல கூடுதல் சலுகைகளையும் இத்திட்டம் அளிக்கிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் வழங்கும் Freedom திட்டங்கள் சில விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன் படி,

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.2397 திட்டமானது, மொத்தம் 365 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ சூட் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலுடன் 365 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

ஜியோவின் ரூ.597 திட்டம், மொத்தம் 75GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ சூட் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலுடன் 90 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

ஜியோவின் ரூ.447 திட்டம், மொத்தம் 50 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ சூட் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலுடன் 60 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.247 திட்டம், மொத்தம் 25 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ சூட் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலுடன் 30 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

TN Job “FB  Group” Join Now

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.127 திட்டம், மொத்தம் 12 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், ஜியோ சூட் பயன்பாடுகளுக்கு இலவச அணுகலுடன் 15 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

ஏர்டெலின் ரூ.456 திட்டம், மொத்தம் 50 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஃபாஸ்டேக்கில் கேஷ்பேக் உடன் 60 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

Vi யின் ரூ.447 திட்டம், மொத்தம் 50 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், Vi திரைப்படங்கள் மற்றும் டிவியில் இலவச அணுகல் உடன் 60 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

Vi ன் ரூ.267 திட்டம், மொத்தம் 25 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், Vi திரைப்படங்கள் மற்றும் டிவியில் இலவச அணுகல் உடன் 30 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

இறுதியாக BSNL ன் ரூ.447 திட்டம், மொத்தம் 100 GB டேட்டாவுடன் தினசரி 100 SMS, அன்லிமிடெட் கால்ஸ், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் சந்தா உடன் 60 நாட்கள் வரை செல்லுபடியாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!