அக்டோபர் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
அக்டோபர் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அக்டோபர் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அக்டோபர் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள 20 நாட்களில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் வங்கி விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு சேவைகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி விடுமுறை

வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த ஆண்டு துவங்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. இப்போது நடந்து கொண்டிருக்கும் அக்டோபர் மாதத்தில் மீதமிருக்கும் 20 நாட்களில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு! பட்டதாரிகள் கவனத்திற்கு!

அந்த வகையில் நாளை (அக்டோபர் 12) முதல் பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு மூடப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அக்டோபரில் நாடு முழுவதும் துர்கா பூஜை, நவராத்திரி மற்றும் தசரா கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால், ரிசர்வ் வங்கி (RBI) நாட்காட்டியின் படி, இந்த மாதம் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் சற்றே நீண்டுள்ளது. இப்போது வங்கி விடுமுறை நாட்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும்.

எனவே, இந்த விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட தேதிக்குள் தங்களது சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • அக்டோபர் 12 – துர்கா பூஜை, மகா சப்தமியை முன்னிட்டு அகர்தலா, கொல்கத்தாவில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 13 – துர்கா பூஜை, மகா அஷ்டமியை முன்னிட்டு அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி ஆகிய பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • அக்டோபர் 14 – துர்கா பூஜை, தசரா, ஆயுத பூஜையை முன்னிட்டு அகர்தலா, பெங்களூரு, சென்னை, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.

சமையல் எண்ணெய் விலை குறைப்பு நடவடிக்கை – மத்திய அரசு தீவிரம்! இல்லத்தரசிகள் நிம்மதி!

  • அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா, விஜய தஷமி காரணமாக இம்பால் மற்றும் சிம்லா மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும்.
  • அக்டோபர் 16 – துர்கா பூஜை காரணமாக கேங்டாக் பகுதியில் வங்கிகள் செயல்படாது.
  • அக்டோபர் 17 – ஞாயிறு, பொது விடுமுறை
  • அக்டோபர் 18 – கதி பிஹு காரணமாக கவுகாத்தியில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
  • அக்டோபர் 19 – முகமது நபியின் பிறந்த நாளை முன்னிட்டு அகமதாபாத், பெலாப்பூர், போபால், சென்னை, டேராடூன், ஹைதராபாத், இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி , லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.
  • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை, ஐடி-இ-மிலத் காரணமாக அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா பகுதிகளில் வங்கிகள் செயல்படாது.
  • அக்டோபர் 22 – ஈத்-இ-மீலாத்-உல்-நபியை முன்னிட்டு ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை, விடுமுறை.
  • அக்டோபர் 24 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • அக்டோபர் 26 – சேர்க்கை நாளை முன்னிட்டு ஜம்மு, ஸ்ரீநகர் பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • அக்டோபர் 31 – ஞாயிறு, பொது விடுமுறை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!