மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு – வெளியான அதிரடி அறிவிப்பு!!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக் குழு கூடிய விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
8வது ஊதியக்குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது தான் தீபாவளி போனஸ் மற்றும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதோடு, கூடுதலாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வரவிருப்பதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெற்று வருகிறார்கள். இந்நிலையில், கூடிய விரைவில் ஊழியர்களுக்கு புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, இந்த புதிய ஊதியக்குழு 2026ம் ஆண்டு ஜனவரி 01ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு 3.68 மடங்கு ஃபிட்மென்ட் காரணி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 44.44% உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது, அடிப்படை ஊதியம் ரூ. 18,000 பெறும் ஊழியர்களின் சம்பளம் ரூ.26,000 ஆக உயர வாய்ப்புள்ளது.