தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!

0
தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற அக். 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், தற்போது அதற்கான ஹால் டிக்கெட் அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஹால் டிக்கெட் வெளியீடு:

தமிழக பள்ளிகளில் கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து 8 ஆம் வகுப்பு பயிலும் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை, அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன் படி இந்த தேர்வானது வருகிற அக். 10 ஆம் தேதி முதல் அக். 14 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி படிப்பை சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தி தற்போது படிக்க ஆசை படுபவர்கள் இந்த தேர்வை எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்விற்கு 01.10.2022 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் 06.09.2022 முதல் 10.09.2022 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பதிவு முடிவடைந்த நிலையில் ஹால் டிக்கெட்டை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன் படி 8 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுதேர்வு ஹால் டிக்கெட் இன்று (செப். 29) நண்பகல் 12 மணிக்கு வெளியாகி இருக்கிறது. பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://apply1.tndge.org/private-hall-ticket-revised என்பதில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Download Hall Ticket

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!