8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் 8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அதற்கான விவரங்களை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.

அரசு வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றுகள் குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வர துவங்கி உள்ளது. இந்நிலையில் அரசின் சார்பில் பல வேலைவாய்ப்புகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்ட சுகாதார சங்கம், மாவட்டம் முழுவதும் காலியாக உள்ள 12 பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஆதாருடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் தங்களின் விண்ணப்ப படிவத்தை ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இப்பதவிகளுக்கான வயது வரம்பு, சம்பளம் விவரம் மற்றும் இதர விவரங்களை அறிந்துகொள்ள கீழே பார்ப்போம். மாவட்ட சுகாதார அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவியின் பெயர் கிளீனர், லேப் டெக்னீஷியன், டிரைவர், லேப் அட்டெண்டன்ட், மருந்தாளுநர், மைக்ரோ பயாலஜிஸ்ட், மெக்கானிக், ஏஎன்எம், பல் உதவியாளர். மேலும் காலியிடமாக 12 இடங்கள் உள்ளன. இதன் பணியிடம் திருநெல்வேலி என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆஃப்லைன் மூலம் https : //tirunelveli.nic.in/ விண்ணப்பித்து கொள்ளலாம்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- சம்பளத்தில் பணிவாய்ப்பு..!

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க முதலில் விண்ணப்பதாரர் tirunelveli.nic.in இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க வேண்டும். பின்னர், பிழை இல்லாமல் அவற்றை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து துணை இயக்குனர் சுகாதார பணியாளர்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதார பணியாளர்கள் அலுவலகம், 16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!