சென்னை ICF ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 876 காலிப்பணியிடங்கள்! முழு விவரம்!

0
சென்னை ICF ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 876 காலிப்பணியிடங்கள்! முழு விவரம்!
சென்னை ICF ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - 876 காலிப்பணியிடங்கள்! முழு விவரம்!
சென்னை ICF ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – 876 காலிப்பணியிடங்கள்! முழு விவரம்!

ரயில் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 876 பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு:

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில் பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விவரங்கள்: ஐசிஎஃப் தொழிற்சாலையில் கார்பெண்டர், பிட்டர், வெல்டர், மெஷினிஸ்ட், எலக்ட்ரீசியன் மற்றும் பெயிண்டர் ஆகிய பிரிவுகளின் கீழ் 876 அப்ரண்டிஸ் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தமுள்ள பணியிடங்களில் 276 பணியிடங்கள் புதுமுக விண்ணப்பதாரர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகள் முன்னாள் ஐடிஐ நபர்களுக்கு வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : புதுமுக விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எக்ஸ் ஐடிஐ விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்வில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து தேசிய வர்த்தகச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் வயது வரம்பு : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 26ஆம் தேதி நிலவரப்படி 15 முதல் 24 வயது கொண்டவராக இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மாதாந்திர உதவித்தொகை: அப்ரண்டிஸ் பணியில் சேரும், 10 ஆம் வகுப்பு முடித்த புதுமுக விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.6,000 உதவித் தொகையாக வழங்கப்படும். அவர்கள் 12ஆம் வகுப்பு முடித்திருப்பின் மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியீடு? முழு விவரம் இதோ!

மத்திய அரசு நிறுவனம் அல்லது மாநில அரசு நிறுவனம் மூலமாக சான்றளிக்கப்பட்ட எக்ஸ் ஐடிஐ தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : இதற்கான ஆன்லைன் பதிவு பணிகளை ஐசிஎஃப் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூலை 16 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://pb.icf.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: இடஒதுக்கீடு பிரிவுகளில் அல்லாதவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 மற்றும் சேவைக் கட்டணம் சேர்த்து கட்ட வேண்டும். SC , ST மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி:

  • முதலில் ஐசிஎஃப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பம் செய்க என்ற லிங்க் மீது கிளிக் செய்யவும்.
    விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
  • இறுதியாக சப்மிட் பட்டனை அழுத்தவும்.
  • இதைச் செய்த பிறகு, விண்ணப்ப படிவத்தை எதிர்கால பயன்பாடு கருதி பிரிண்ட் அவுட் எடுத்து சேமித்து வைத்துக் கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!