மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாதம் ரூ.86,500 சம்பளத்தில் இந்திய சணல் கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

கொல்கத்தாவில் இயங்கி வரும் இந்திய சணல் கழகத்தில் காலியாக உள்ள 63 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசு விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது முதல் வேலைகளை இழந்த மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும் மாநில மற்றும் மத்திய அரசும் வேலைவாய்ப்புக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

இனி ‘TATA IPL’ தான் – டைட்டில் ஸ்பான்சரை தட்டி தூக்கிய டாடா நிறுவனம்!

அதன் தொடர்ச்சியாக தற்போது கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் இந்திய சணல் கழகத்தில் காலியாக உள்ள 63 பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Accountant, Junior Assistant, Junior Inspector போன்ற 63 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ப்படவுள்ளனர். இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவர்கள்  jutecorp.in என்ற இணையதளம் வாயிலாக ஜனவரி 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் சிபிடி ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்கள்:

Accountant

Accountant பணிக்கு 12 காலிப்பணியிடங்கள் உள்ளது. வணிகவியல் துறையில் முதுநிலை பட்டம். 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் பி.காம் முடித்து 7 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பளம் ரூ.28,600 – 1,15,000

Junior Assistant

இப்பணியில் 11 காலிப்பணியிடங்கள் உள்ளது. இளநிலைப் பட்டம் பெற்று கணினியில் எம்எஸ் வேர்டு, எக்ஸல் தெரிந்திருப்பதுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.இப்பணிக்கு சம்பளம் மாதம் ரூ.21,500 – 86,500

Junior Inspector

இப்பணியில் 40 காலியிடங்கள் உள்ளது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் கொள்முதல், விற்பனை, தரப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் பிணையளித்தல், சேமிப்பு, போக்குவரத்து போன்ற பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருபவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.21,500 – 86,500 வரை வழங்கப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here