தமிழகத்தில் தமிழர்களுக்கே 80 சதவீத பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் தமிழர்களுக்கே 80 சதவீத பணியிடங்கள் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் தமிழர்களுக்கே 80 சதவீத பணியிடங்கள் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் தமிழர்களுக்கே 80 சதவீத பணியிடங்கள் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் பெரும்பாலும் வெளிமாநிலத்தவர்கள் தான் பணியமர்த்தப்பட்டுள்ளதால் தமிழ் மக்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்படியும், போலி சான்றிதழ்களை சமர்பித்த வெளிமாநிலத்தவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழர்களுக்கு பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை அளிக்க பலரும் தயங்கி வருகின்றனர். அதாவது குறைவான அளவிலான தமிழர்களையே பணியமர்த்தியுள்ளனர். இதனால் தமிழர்கள் வேலைக்காக வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத மின் நிறுவனம், துப்பாக்கி தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட பல அரசு தரப்பிலான நிறுவனங்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் தான். மீத 5% தொழிலாளிகள் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!

இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இருக்கிறார்கள். அதாவது இந்தி சரளமாக பேச வேண்டும் என்பதற்காக மற்ற மாநிலத்தவர் மறைமுகமாக தேர்வு செய்கின்றனர். தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் தொழில் பழகுநர் இடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 1765 பேரில் 1600 பேர் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள். இது மட்டுமல்லாமல் கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை ரயில்வே மண்டலத்தில் 884 காலி இடங்கள் இருந்தன. அதில் 80 பேருக்கு மட்டுமே தமிழருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரயில்வே குரூப் டி பணிக்காக 2362 பணியிடங்களில் 74 பேருக்கு மட்டுமே தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசல் – 2 பேர் உயிரிழந்த பரிதாபம்! மாவட்ட நிர்வாக உதவி எண்கள் அறிவிப்பு!

இந்நிலையில் தமிழகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் பிற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களில் 300 பேர் தவறான சான்றிதழை பயன்படுத்தி பணியமர்த்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் 80% பணியாளர்கள் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என சட்டம் உள்ளது. இந்த மோசடிகளை தொடர்ந்து தற்போது சீமான் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அதாவது போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணியில் அமர்த்தப்பட்டு இருக்கும் வெளிமாநிலத்தவர்கள் உடனடியாக பணியில் இருந்து விலக்க வேண்டும் எனவும் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!