தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 80% பெற்றோர்கள் கோரிக்கை – தயாராகும் கல்வித்துறை!!

1
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க 80% பெற்றோர்கள் கோரிக்கை - தயாராகும் கல்வித்துறை!!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க 80% பெற்றோர்கள் கோரிக்கை - தயாராகும் கல்வித்துறை!!
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 80% பெற்றோர்கள் கோரிக்கை – தயாராகும் கல்வித்துறை!!

தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் முடிவில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று தெரிவித்த நிலையில், விரைவில் மருத்துவ குழுவிடம் ஆலோசனை கேட்டு பின் பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறக்கப்படும்:

தமிழகத்தில் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் கடந்த நம்பர் மாதம் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில் பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டது.

கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசு – தமிழக அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் திறந்து வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் 2 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது. கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவில் 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்கலாம் என்று அனுமதி வழங்கிய நிலையில் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

குரூப் 1 தேர்வு விடைக்குறிப்பில் ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் – TNPSC அறிவிப்பு!!

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெரும்பாலான பெற்றோர்கள் பொதுத்தேர்வு எழுதும் தங்கள் பிள்ளைகள் கடைசி 3 மாதங்களாவது பள்ளிக்கு சென்று படிக்கவேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் வாயிலாக படிப்பதை விட நேரடியாக படிப்பதால் தான் மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கும் என கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அதே வழிமுறைகளை பின்பற்றி தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும். ஆனால் 20% பெற்றோர்கள் மேலும் 1 மாதம் கழித்து பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், மாணவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவிக்கின்றனர். எனினும் அதிகப்படியான கருத்துக்களை கொண்டு தான் பரிசீலனை செய்யவேண்டும் எனவே 80% பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க கூறிய நிலையில் இதுகுறித்து மருத்துவ குழுவிடம் ஆலோசித்து பின் தான் பள்ளிகள் திறக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. IT IS A BIG LIE,50/35 ONLY 35 %of parents only wanted school,50% don’t want school ,school authorities changed the list and submitted…. government has opened everything specially THEATRE, GOD can ONLY SAVE THE people of TAMILNADU….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!