நாடு முழுவதும் தினசரி 80 கொலைகள், குறையும் கடத்தல் வழக்குகள் – NCRB ஷாக் ரிப்போர்ட்!

0
நாடு முழுவதும் தினசரி 80 கொலைகள், குறையும் கடத்தல் வழக்குகள் - NCRB ஷாக் ரிப்போர்ட்!
நாடு முழுவதும் தினசரி 80 கொலைகள், குறையும் கடத்தல் வழக்குகள் - NCRB ஷாக் ரிப்போர்ட்!
நாடு முழுவதும் தினசரி 80 கொலைகள், குறையும் கடத்தல் வழக்குகள் – NCRB ஷாக் ரிப்போர்ட்!

நாடு முழுவதும் தினசரி சராசரியாக 80 கொலை வழக்குகள் 2020-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குற்றச்செயல்கள்:

நாடு முழுவதும் நடக்கும் குற்றச் செயல்கள் அனைத்தும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்து வருகிறதது. அனைத்து விதமான குற்றங்களும் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதையும் மீறி பல வகையிலும் குற்றச் செயல்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) கடந்த 2020ம் ஆண்டில் நடந்துள்ள குற்றங்களின் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020-ம் ஆண்டில் நாட்டில் நாள்தோறும் சராசரியாக 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

8ம் வகுப்பு வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு முடிவு!

ஒரு ஆண்டில் மட்டும் 29,193 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் அதிகமாகும். கடந்த 2019-ம் ஆண்டில் 28, 915 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது தினசரி 79 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தது. 2020-ம் ஆண்டில் 84, 805 கடத்தல் வழக்குகள் பதிவான நிலையில், 2019-ம் ஆண்டில் 1,05,036 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2020 ல் 3,779 கொலை வழக்குகள், பிஹாரில் 3,150, மகாராஷ்டிராவில் 2,163, மத்தியப் பிரதேசத்தில் 2,101, மேற்கு வங்கத்தில் 1,948 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது.

நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அதே சமயம் டெல்லியில் 472 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் 12,913 கடத்தல் வழக்குகள் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அதிலும், மேற்கு வங்கத்தில் 9,309, மகாராஷ்டிராவில் 8,103, பிஹாரில் 7,889, மத்தியப் பிரதேசத்தில் 7,320 வழக்குகள் பதிவாகின. டெல்லியில் 4,602 வழக்குகள் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டில் 84,805 கடத்தல் வழக்கில் 88 ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 56,591 பேர் குழந்தைகள் மற்றவர்கள் வயது வந்தோர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here