தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8.83 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் - 8.83 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் - 8.83 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் – 8.83 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

தமிழகத்தில் மே 5 ஆம் தேதி மற்றும் மே 6ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து 11ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று மே 10 ஆம் தேதி ஆரம்பித்து, வரும் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். இரண்டு வருடமாக தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டு திறன் மிக குறைவாக இருந்தது. அதிகமான மாணவர்கள் பல ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

அதன்படி கொரோனா குறைந்த நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தனர். மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்த காரணத்தால் முழுவதுமாக பாடங்களை முடிக்க முடியாமல் இருந்தனர். இதனால் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு அதிகமான பாடங்களை மிக குறைவான நாட்களில் நடத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. அதனால் கல்வித்துறை அமைச்சர் நடத்தப்பட்ட பாடங்களை தவிர மற்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படாது என்ற நற்செய்தியை அறிவித்திருந்தார்.

சன் டிவி “சுந்தரி” சீரியலில் அரங்கேற இருக்கும் பெரிய திருப்பம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

இந்நிலையில், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு 3,119 மையங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வை 8,83,882 பேர் எழுத உள்ளனர் எனவும் இந்த தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என அரசு அறிவித்துள்ளது. இதற்காக மாவட்ட அளவில் பல்வேறு ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here