EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி – தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!

0
EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி - தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!
EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி - தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!
EPFO பயனர்களுக்கு இனிப்பான செய்தி – தீபாவளிக்கு முன்பு 8.5% வட்டி! சூப்பர் அறிவிப்பு!

வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பயனர்களுக்கு தீபாவளி பரிசாக 8.5% வட்டிப் பணம் அளிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் PF கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

PF பணம்

மாத சம்பளம் வாங்கும் ஒவ்வொரு துறையை சேர்ந்த ஊழியர்களுக்கும் சிறந்த எதிர்கால சேமிப்பு திட்டமாக வருங்கால வைப்பு நிதி கணக்கு செயல்பட்டு வருகிறது. இந்த சேமிப்பில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகளும் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர EPFO ஊழியர்களின் வைப்புத்தொகையுடன் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம் (EDLI) 1976ன் கீழ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆயுள் காப்பீட்டுத் திட்ட சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

ஹேமாவை பிரித்து விட வேண்டாம் என கண்ணம்மாவிடம் கெஞ்சும் பாரதி – வெளியான ப்ரோமோ!

இப்போது வரவிருக்கும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு PF பயனர்களுக்கு, 2020-21ஆம் நிதியாண்டுக்கான வட்டித்தொகையை அளிக்க EPFO அமைப்பு முன் வந்துள்ளது. அந்த வகையில் PF பயனர்களுக்கான இந்த 8.5% வட்டி விகிதம் இம்மாத இறுதிக்குள் அவர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் கணக்கில் PF தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய PF கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என டைப் செய்து SMS அனுப்பலாம்.

தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.25) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அல்லது 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்ததும் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இப்போது தீபாவளி பண்டிகை காலத்திற்காக PF பணத்தை எடுக்க திட்டமிட்டுள்ள பயனர்கள் அந்த பணத்தை பெறும் வழிமுறைகளை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். இதற்கான சில எளிய வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதலாவதாக,

கதிருக்காக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை எதிர்க்கும் முல்லை – பரபரப்பான ப்ரோமோ ரிலீஸ்!

  • http://www.epfindia.gov.in இணையதளத்தை திறக்கவும்.
  • அங்கு Online Advance Claim என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு Online Service பக்கத்தில் இருக்கும் Claim (Form-31,19,10C & 10D) ஆப்சனை தேர்வு செய்யவும்.
  • இப்போது வங்கி கணக்கின் கடைசி 4 இலக்க எண்ணை பதிவிட்டு verify கொடுக்கவும்.
  • தொடர்ந்து Proceed கொடுக்கவும்.
  • இப்போது டிராப் டவுன் கட்டத்தில் PF Advance ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • PF பணம் எடுப்பதற்கான காரணத்தை கொடுக்கவும்.
  • இதற்கு மருத்துவம் என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்யலாம்.
  • இப்போது எவ்வளவு பணம் எடுக்க வேண்டுமோ அதை பதிவிட்டு காசோலையின் ஸ்கேன் காப்பியை பதிவேற்றவும்.
  • தொடர்ந்து Get Aadhaar OTP கொடுக்கவும்.
  • உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP ஐ உள்ளீட்டு submit கொடுக்கவும்.
  • இங்கு மருத்துவ காரணங்களுக்காக பணம் எடுக்கும் பட்சத்தில் நீங்கள் கோரிய மொத்த பணமும் அரை மணி நேரத்திற்குள்ளாகவே உங்கள் வங்கி கணக்குக்கு செலுத்தப்பட்டு விடும் என்பது கவனிக்கத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here