அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அண்மையில் வந்த குட் நியூஸ்!!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அண்மையில் வந்த குட் நியூஸ்!!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அண்மையில் வந்த குட் நியூஸ்!!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அண்மையில் வந்த குட் நியூஸ்!!

அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை பரிந்துரை செய்யும் ஊதியக் குழுவை புதிதாக அமைப்பது தொடர்பாக அரசின் திட்டம் குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஊதியக்குழு:

மத்திய மற்றும் மாநில அரசின் துறைகளின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுகளுக்கான ஊதியம் பதவி நிலை வாரியான அமைப்பை கொண்டுள்ளது. மேலும் பொருளாதார நிலை மற்றும் விலைவாசி நிலவரங்களை பொறுத்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய குழு அமைக்கப்படுகிறது. தற்போது 2014 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதிய குழு அமலில் இருந்து வருகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் படி அரசு ஊழியர்களுக்கு ரூ.18,000 குறைந்தபட்ச ஊதியம் ஆகவும், 56,900 அதிகபட்ச ஊதியம் ஆகவும் இருந்து வருகிறது.

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை – வானிலை மையம் தகவல்!

இந்நிலையில் 7 -வது ஊதியக் குழுவின் செயல்பாட்டு காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், புதிதாக 8 -வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டு எட்டாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஊதியக் குழுவை அமைப்பதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 25,000 வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய ஊதியக் குழு அமைவதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!