Post Office இல் பணத்தினை பன்மடங்காக்கும் சிறந்த 8 திட்டங்கள் – பொதுமக்களின் கவனத்திற்க்கு!

0
Post Office இல் பணத்தினை பன்மடங்காக்கும் சிறந்த 8 திட்டங்கள் - பொதுமக்களின் கவனத்திற்க்கு!
Post Office இல் பணத்தினை பன்மடங்காக்கும் சிறந்த 8 திட்டங்கள் - பொதுமக்களின் கவனத்திற்க்கு!
Post Office இல் பணத்தினை பன்மடங்காக்கும் சிறந்த 8 திட்டங்கள் – பொதுமக்களின் கவனத்திற்க்கு!

சாதாரண நிலையில் உள்ள மக்கள் முதல் மிகவும் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்களது முதலீட்டிற்கு ஏதுவான அதிக அளவியல் லாபத்தை ஈட்டும் வகையில் அஞ்சலகத்தில் பல திட்டங்கள் உள்ளது. அவற்றை குறித்து இந்த பதிவில் காணலாம்.

சேமிப்பு திட்டங்கள்:

தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய அரசு மிகவும் பாதுகாப்பாக நமது முதலீடு தொகையை நிர்வகித்து வருகிறது. டுத்தர மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழக பள்ளிகள் & கல்லூரிகளுக்கு நாளை (ஏப்ரல் 11) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் அஞ்சல் அலுவலகத்தை தவிர மற்ற வழிகளில் வருகின்றனர். சேமிப்பு திட்டம், முதலீடு, பிக்சட் டெபாசிட் என அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்களும் அதிக லாபம் மற்றும் வட்டியை மக்களுக்கு வழங்கும் வகையில் பல திட்டங்கள் அஞ்சலகத்தில் உள்ளது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா:

அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டியை தருவது சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் தான். பெண் குழந்தைகளின் நலனிற்காக தொங்கப்பட்ட இந்த திட்டத்தில் 7.6% வட்டி வழங்கப்படுகிறது. எளிதாக பணத்தை இரட்டிப்பாக்க இந்த திட்டத்தை தான் பலரும் தேர்வு செய்கின்றனர். இந்த திட்டத்தில் நமது முதலீட்டு தொகை 9.47 ஆண்டுகளில் இரட்டிப்பாக மாறிவிடும்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:

முதியவர்களின் நலனிற்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதம் 7.4 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 9.73 ஆண்டுகளில் நமது முதலீடு இந்த திட்டத்தில் இரட்டிப்பாக மாறிவிடும்.

PPF திட்டம்:

பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் வட்டி விகிதம் 7.1 ஆகும். இந்த திட்டத்தில் உங்களது பணம் 10.14 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும். அதிக அளவிலான பொதுமக்கள் தேர்வு செய்யும் திட்டமாக இது உள்ளது.

மாத வருமானத் திட்டம்:

மாத வருமானத் திட்டத்தில் உங்களது பணம் 10.91 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகும். மாத வருமானத் திட்டத்தின் வட்டி விகிதம் 6.6 ஆகும்.

தேசிய சேமிப்பு திட்டம்:

5 ஆண்டுகளை முதிர்ச்சி காலமாக கொண்ட தேசிய சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 6.8 ஆகும். தேசிய சேமிப்பு திட்டத்தில் தொகை 10.59 ஆண்டில் இரட்டிப்பாகும்.

டைம் டெபாசிட் திட்டம்:

இதில் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட வட்டியை அரசு நிர்ணயித்துள்ளது. 1 முதல் 3 வருட கால டெபாசிட் திட்டத்தில் 5.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இதில் நமது பணம் இரட்டிப்பாக 13 ஆண்டுகள் காலம் ஆகும். 5 ஆண்டு திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி விகிதமும் முதலீட்டு பணம் 11.5 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

ரெக்கரிங் டெபாசிட் திட்டம்:

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் 5.8 ஆக உள்ளது. 12.41 ஆண்டுகளில் உங்கள் தொகை இதில் இரண்டு மடங்காக மாறி விடும்.

சேமிப்பு வங்கி கணக்கு:

சேமிப்பு வங்கி கணக்கில் 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதில் முதலீடு செய்த தொகை 18 ஆண்டுகளில் இரட்டிப்பு ஆகிவிடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!