ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு 8.13% சம்பள உயர்வு!

0
ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த ஆண்டு 8.13% சம்பள உயர்வு!
ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இந்த ஆண்டு 8.13% சம்பள உயர்வு!
ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இந்த ஆண்டு 8.13% சம்பள உயர்வு!

கடந்த 2020ம் ஆண்டு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் அனைத்து வணிக நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. மேலும், இந்தியாவில் நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட வேகமான பொருளாதார மீட்சி பெற்ற உள்ள நிலையில், இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சராசரியாக 8.13% சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாப்பி நியூஸ்:

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல கட்டங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பின. இருக்கும் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு உள்ளிட்டவை அமலாகின என்பது குறிப்பிடத்தக்கது. பல நிறுவனங்கள் பெரிய அலுவலகங்களை காலி செய்துவிட்டு, வெறுமனே கருத்தரங்கு அறை மற்றும் கம்ப்யூட்டர் சர்வரை பராமரிக்க ஒரு அறை ஆகியவற்றைக் கொண்ட சிறிய அலுவலகங்களுக்கு மாறின.

TCS நிறுவனத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தற்போது, மீண்டும் உலகம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்குத் திரும்புகிறது, இது சம்பள உயர்விலும் எதிரொலிக்கும். மேலும் பல நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து ஊழியர்கள் பணிபுரிவதால் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தகுதி வாய்ந்த, திறமையான நபர்களை கூடுதல் சம்பளம் கொடுத்து தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்கள் விரும்புவதாக தெரிகிறது. மேலும், இந்தியாவில் நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட வேகமான பொருளாதார மீட்சி, வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையில் புத்துயிர் பெற்ற நிலையில், இந்த ஆண்டு ஊழியர்களுக்கு சராசரியாக 8.13% சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த வருடம் வணிக நடவடிக்கைகள் மீண்டும் வளர்ந்து வரும் நிலையில், நிறுவனங்கள் இழப்பீட்டு வரவு செலவுத் திட்டங்களை அவற்றின் மலிவு மற்றும் நிலையான செலவு அதிகரிப்புகளின் நீடித்த தன்மையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் நிர்வகித்து வருகின்றன. பெருந்தொற்றுக்கு முந்தைய காலக்கட்டமான 2019க்கு முன்பு 7 சதவிகிதமாக இருந்த நிலையான சம்பள உயர்வு, 2022ஆம் ஆண்டு 9 சதவிகிதமாக உயரும் என மைக்கேல் பேஜ் சம்பள அறிக்கை 2022இல் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய தனியார் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டும் இன்றி அனைத்து விதமான ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கும் 12 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

வங்கி மற்றும் நிதிச் சேவை, சொத்து மற்றும் கட்டமைப்பு, உற்பத்தி உள்ளிட்டவை சார்ந்த அரசு நிறுவன பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இ வர்த்தகம் வளர்ந்து வருவதாலும் மற்ற துறைகள் டிஜிட்டல் மயமாகி வருவதாலும் கணினி அறிவியல் சார்ந்து பணிபுரியும் மூத்த அலுவலர்கள், நல்ல ஊதியம் கிடைக்கும் பணிக்கு மாறுவார்கள் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!