ஜூன் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூன் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூன் மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மாதந்தோறும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியிடப்படுகிறது. மேலும் வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது மற்றும் ஒரு மாநிலத்திலிருந்து, மற்ற மாநிலத்திற்கு விடுமுறை வேறுபடும். இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகி இருக்கிறது.

விடுமுறை பட்டியல்:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வரும் ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் படி, பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் என ஜூன் மாதத்தில் 8 நாட்கள் வரை மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய விடுமுறைகள் தவிர, சில மாநிலத்திற்கான குறிப்பிட்ட விடுமுறைகள் இதில் அடங்கும். இதில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.

Exams Daily Mobile App Download

வங்கிகள் பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்கி வருகின்றன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பென்சன் உள்ளிட்ட பல்வேறு அவசிய சேவைகளுக்கு வங்கி முக்கியமாக இருக்கின்றன. இதுபோக தொழில், வணிகம் சார்ந்த விஷயங்களுக்கும் வங்கிகள் அவசியமானதாக இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம் ஆகும். இதன் மூலம் தேவையில்லாத அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்க முடியும்.

ஜூன் 2022 வங்கி விடுமுறைகள்:

02 ஜூன் 2022: மகாராணா பிரதாப் ஜெயந்தி

15 ஜூன் 2022: ஒய்எம்ஏ தினம்/குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்/ராஜ சங்கராந்தி

5 ஜூன் 2022: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

11 ஜூன் 2022: இரண்டாவது சனிக்கிழமை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

12 ஜூன் 2022 : வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

19 ஜூன் 2022: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

25 ஜூன் 2022: நான்காவது சனிக்கிழமை

26 ஜூன் 2022: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!