மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிப்பு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!

0
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிப்பு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிப்பு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிப்பு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!

மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படி (HRA) 2022 ஜனவரி தொடக்கத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று 7வது ஊதியக் குழு சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும் என்பதால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

7 வது ஊதியக்குழு:

மத்திய அரசு கடந்த மூன்று தவணைகளாக தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதிய படிகளை பொருளாதார சிக்கலினால் நிலுவையில் வைத்தது. இவ்வாறு நிலுவையில் இருந்த கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மற்றும் DR உயர்வு வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது. இதனால் 17% ஆக இருந்த DA 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அகவிலைப்படி உயர்வுடன் தொடர்புடைய மற்ற பலன்களும் ஊழியர்களுக்கு அதிகரித்தது. இதனுடன் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஜூலை 2021 தவணைக்கான அகவிலைப்படி மேலும் 3% அதிகரிக்கப்பட்டு தற்போது மொத்தம் 31% அகவிலைப்படி உயர்வினை பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில், இந்திய ரயில்வே டெக்னிக்கல் சூப்பர் வைசர்ஸ் அசோசியேஷன் மற்றும் நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் ரயில்வே மேன் ஆகியவை ஜனவரி 1, 2021 முதல் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) ஐ அமல்படுத்த கோரிக்கை வைத்துள்ளது. இதனால் 11.56 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டால், 2021 ஜனவரியில் ஊழியர்களுக்கு HRA கிடைக்கும். மேலும், வீட்டு வாடகை படி நகரங்களுக்கு ஏற்ற வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள படி அதிகரிக்கப்படும்.

தமிழகத்தில் நவ.20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் ‘X’ பிரிவின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘Y’ பிரிவிலும், 5 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ‘Z’ பிரிவிலும் வருகின்றன. மூன்று பிரிவுகளுக்கும் குறைந்தபட்ச HRA ரூ.5400, ரூ.3600 மற்றும் ரூ.1800 ஆக இருக்கும். 7வது ஊதியக் குழுவின் அறிக்கைகளின் படி, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை படி 2022 ஜனவரி தொடக்கத்தில் மத்திய அரசு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here