மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு - 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு - 7வது ஊதியக்குழு தகவல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு – 7வது ஊதியக்குழு தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1,2022 க்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 3% DA வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) ஜனவரி முதல் ஜூலை வரை ஆண்டுக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படுகிறது. தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்தால் பெருக்குவதன் மூலம் DA கணக்கிடப்படுகிறது. அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DA வழங்கப்படுகிறது. இது ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுகளுக்கு உதவுவதற்காக வழங்கப்படுகிறது. கடைசியாக DA ஜூலை 2021க்கு 3% உயர்த்தப்பட்டு மொத்தம் தற்போது வரை 31% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகின்றது.

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் – ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!

ஜனவரி 1,2022க்கான DA உயர்வு மார்ச் 18, 2022 அன்று ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டு மொத்தம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% DA வழங்கப்பட உள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படியானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். 7 வது ஊதியக்குழுவின் அறிக்கையின் படி, அனைத்து ஊழியர்களுக்கும் மார்ச் மாதத்தில் முழு சம்பளம் கிடைக்கும், இதில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகையும் அடங்கும். JCM இன் தேசிய கவுன்சிலின் ஷிவ் கோபால் மிஸ்ரா அவர்கள் இது தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமிர்தாவை பாட்டு பாட வைக்கும் எழில், இனியாவை அடித்த பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அதில், நிலை-1 ஊழியர்களின் DA நிலுவைத் தொகை ரூ.11,880 முதல் ரூ.37,554 வரையும், நிலை-13 மற்றும் நிலை-14 ல் உள்ள பணியாளர்கள் முறையே ரூ.1,44,200 மற்றும் ரூ.2,18,200 டிஏ நிலுவைத் தொகையில் செலுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் உயரும். இந்த அறிவிப்பை அரசு வெளியிடுவதன் மூலம் பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!