மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2022 ஜனவரி முதல் 34% அகவிலைப்படி (DA) உயர்வு? 7வது ஊதியக்குழு!

மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டு முதல் அதாவது 2022 ஜனவரி தொடங்கி அகவிலைப்படியானது மேலும் 3 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 34% ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் படி DA அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு:

புத்தாண்டை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி வெளிவந்துள்ளது. அதாவது விரைவில் அகவிலைப்படியில் மற்றொரு உயர்வைப் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பிரபல செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனவரி 2022 இல் அகவிலைப்படியை (DA) மீண்டும் உயர்த்த வாய்ப்புள்ளது. ஜனவரி 2022 இல் அகவிலைப்படி (DA) எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பது முடிவு செய்யப்படவில்லை என்றாலும், AICPI குறியீட்டின் தரவு 3 சதவிகிதம் DA அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த உயர்வால், ஊழியர்களின் சம்பளமும் மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சியில் நாளை (நவ.26) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மிஸ் பண்ணிடாதீங்க!

இதனால் மொத்த DA சதவீதத்தை 31 இல் இருந்து 34 சதவீதமாக எடுத்துக் கொள்ளலாம். அகவிலைப்படி உயர்வு குறித்த மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லாத நிலையில், மத்திய அமைச்சரவையின் திட்டத்தில் அகவிலைப்படி உயர்வு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியின் கூடுதல் தவணையையும், ஜூலை 1, 2021 முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கு அகவிலை நிவாரணத்தையும் (டிஆர்) மத்திய அரசு வெளியிட்டது. தற்போதுள்ள அடிப்படைத் தொகையான 28% விகிதத்தை விட இது 3 சதவீத டிஏ உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் ஏற்கனவே சுமார் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளனர். இத்தகைய மத்திய அரசின் முடிவால் ஆண்டுக்கு 9,488 கோடி ரூபாய் கூடுதல் சுமை ஏற்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் கூறியிருந்தார். நாடு முழுவதும் பரவிய கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு, ஜனவரி 1, 2020, ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் செலுத்த வேண்டிய மூன்று கூடுதல் தவணை டிஏ மற்றும் டிஆர் ஆகியவற்றை அரசு முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here