மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 7வது ஊதிய கமிஷன்! முதல்வர் விளக்கம்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - 7வது ஊதிய கமிஷன்! முதல்வர் விளக்கம்!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - 7வது ஊதிய கமிஷன்! முதல்வர் விளக்கம்!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 7வது ஊதிய கமிஷன்! முதல்வர் விளக்கம்!

கர்நாடகா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்த ஏழாவது ஊதிய கமிஷன் அமைக்க வாய்ப்புள்ளது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து தற்போது 31% ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் 2 அல்லது 3% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வந்துள்ளது. மேலும் 7- வது ஊதிய குழுவின் பரிந்துரையின்படி வீட்டு வாடகைபடி, சம்பளம் போன்றவை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அளித்தது.

பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு! தேர்தல் எதிரொலி!

அந்த வகையில் தற்போது தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்த 7- வது ஊதிய கமிஷன் அமைக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நாட்டின் 25 மாநிலங்களில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படுகிறது. நம் அரசும், ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்று சட்ட மேலவையில் கேள்வி நேரத்தில் தெரிவித்தது.

TNPSC 151 துறைத்தேர்வுகள் – தேர்வு எழுதியவர்களுக்கான முக்கிய வெளியீடு..!

அதற்கு முதல்வர், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கிடையே, ஊதிய பாரபட்சம் உள்ளது. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய அரசில் ஏழாவது ஊதிய கமிஷன் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மாநில அரசு தன் பொருளாதார நிலையை கவனித்து, ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏழாவது ஊதிய கமிஷன் அமைக்க பட்ஜெட்டில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதை அடுத்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. அதனால் அரசுத் துறை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here