பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.78000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.78000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.78000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.78000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள 145 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

இந்தியாவில் மற்ற துறைகளை தொடர்ந்து வங்கி துறையிலும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில், காலியாக உள்ள 145 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மேலாளர் (ரிஸ்க்) பிரிவில் 40 இடங்களும், மேலாளர் (கிரெடிட்) பிரிவில் 100 இடங்களும், மூத்த மேலாளர் பிரிவில் 5 இடம் என மொத்தம் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாளர் (கிரெடிட்) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் CA படிப்பு சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

மே மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!

மேலாளர் (ரிஸ்க்) பணியிடத்திற்கு அமெரிக்காவின் சிஎஃப்ஏ நிறுவனத்தில் சாட்டர்டு பைனான்சியல் அனலிஸ்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.பணி சார்ந்து ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும். இதனுடன் முழு நேர எம்பிஏ அல்லது பிஜிடிஎம் படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் புனேவின் என்ஐபிஎம் நிறுவனத்தில் வங்கி மற்றும் நிதி சேவைகளில் முதுநிலை டிப்ளமோ கல்வி முடித்திருக்க வேண்டும். அடுத்ததாக மூத்த மேலாளர் பதவி இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும்.

ExamsDaily Mobile App Download

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதளம் வாயிலாக ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் தேர்வு, அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்கள் எழுத்துத் தேர்வு ஜூன் 12ம் தேதி நடைபெறும் என்றும் மேலாளர் (ரிஸ்க்) மற்றும் மேலாளர் (கிரெடிட் பதவிகளில் தேர்வானவர்களுக்கு ஊதியம் ரூ.4,81,170 முதல் ரூ.69,810 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!