76வது ஐநா பொதுச்சபை தலைவர் – மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் தேர்வு!!
2021-22 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை:
ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபை தலைவர் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021-22 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு ஆசிய – பசுபிக் பிராந்தியத்திற்கு வழங்கப்பட்டது. இந்த தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது.
அரசு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் – கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு!
அதில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மே ரசூலும், மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித்தும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இதில் அப்துல்லா சாகித் 143 வாக்குகள் பெற்று முன்னணி வகுத்தார். சல்மே ரசூல் 48 வாக்குகளும் பெற்றார். அதன் பின்னர் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா சாகித் 76வது ஐ.நா பொதுச்சபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
TN Job “FB Group” Join Now
வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை ஷாகித் துவக்கி வைப்பார். இந்தியா உள்பட உறுப்பினர் நாடுகளின் ஐ.நா. தூதர்கள் அப்துல்லா ஷாகித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.