தமிழகத்தில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் 75% கல்விக்கட்டணம் மட்டுமே வசூல் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கொரோனா சூழல் முடியும் வரை 75% சதவிகித கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

கல்விக் கட்டணம்:

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 70 சதவிகித கட்டணத்தை 3 தவணையாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!

2021-2022 ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 31 வரை 40 சதவீதம் கல்விக் கட்டணம் மட்டுமே வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் பின்னர் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும் மீதமுள்ள 35 சதவிகிதம் வசூலிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கொரோனா சூழல் முடியும் வரை 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருப்பது போல் பிற கல்லூரிகளிலும் மதிப்பீடு முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். நேற்று வரை பொறியியல் கல்லூரிகளில் சேர ஒற்றைச்சாளர முறையில் 41 ஆயிரத்து 363 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 102 இடங்கள் உள்ள நிலையில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 748 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தெரிவித்த அவர், பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டின் அரியர் தேர்வுகளை மொத்தமாக எழுதுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here